»   »  தென்னிந்திய திரையுலக டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராகும் ராதாரவி!

தென்னிந்திய திரையுலக டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவராகும் ராதாரவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
தென்னிந்திய திரையுலக டப்பிங் சங்கத் தலைவராகும் ராதாரவி!- வீடியோ

சென்னை : தென்னிந்திய திரையுலக டப்பிங் சங்கத்துக்குத் தலைவராகியிருக்கிறார் நடிகர் ராதாரவி. விஷாலுக்கு எதிர் அணியில் இருக்கும் ராதாரவி சரத்குமாரை கடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற வைக்க முயற்சித்தார். ஆனால், விஷால் அணியினர் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றதால் அவர்களது ராஜ்ஜியம் உருவானது.

தென்னிந்திய திரையுலக டப்பிங் சங்கத்துக்கு, கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த தேர்தலில், நடிகர் ராதாரவி தலைமையில் ஒரு அணியும், கண்டசாலா ரத்னகுமார் தலைமையிலான 'ராமராஜ்யம்' அணியும் போட்டியிட்டன.

Radharavi elected as president of dubbing artistes associarion

இந்தத் தேர்தலில், ராதாரவி வெற்றிபெற்று சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக கதிரவனும், பொருளாளராக ராஜ்கிருஷ்ணனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக கே.ஆர்.செல்வராஜ், வீரமணி மற்றும் ரோகிணி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராஜேந்திரன், ஸ்ரீஜா ரவி, சீனிவாசமூர்த்தி ஆகியோர் இணை செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நடிகர் ராதாரவி, விஷாலுக்கு முன்பு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Radharavi elected as president of south indian dubbing artistes association.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil