»   »  விஷால் ரெட்டி பின்னணியில் யார்?.. எங்கே போனார்கள் ரஜினி, கமல்??.. போட்டுத் தாக்கிய ராதிகா

விஷால் ரெட்டி பின்னணியில் யார்?.. எங்கே போனார்கள் ரஜினி, கமல்??.. போட்டுத் தாக்கிய ராதிகா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கப் பிரச்சினையைத் தீர்க்க ஏன் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் முன்வரவில்லை என்று நடிகை ராதிகா காட்டமாக கேட்டுள்ளார்.

சமீபத்தில் தனது தரப்பு நடிகர்களை கூட்டமாக சேர்த்து படு காரசாரமாக பேசி அனைவரையும் தங்கள் பக்கம் திருப்பியது நாசர் - விஷால் அணி.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர் சரத்குமார் தரப்பு நடிகர்கள். இந்தக் கூட்டத்தில் நடிகர் சிம்பு பாய்ந்தெடுத்து விட்டார். ராதிகாவும் சரமாரியாக கேள்விகள் எழுப்பிப் பேசினார்.

ராதிகாவின் பேச்சிலிருந்து...

நடிகர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம்

நடிகர்கள்தான் பிரச்சினைக்குக் காரணம்

நடிகர் சங்க பிரச்சனைக்கு நடிகர்கள்தான் காரணம். நடிகர் சங்க பிரச்சனைகளை பேசி தீர்க்க வேண்டும். தலைகுனிவை ஏற்படுத்தும் அளவுக்கு பிரச்சனைகள் பெரிதாக வளர்ந்துள்ளன.

ஏன் ரஜினி, கமல் வரவில்லை?

ஏன் ரஜினி, கமல் வரவில்லை?

நடிகர் சங்க பிரச்சனையை தீர்க்க ரஜினி, கமல் ஏன் முன்வரவில்லை. சர்ச்சைக்குள் வர விருமபவில்லை என்று கமல் கூறினார்.

விஷால் ரெட்டி பின்னால் இருப்பது யார்?

விஷால் ரெட்டி பின்னால் இருப்பது யார்?

விஷால் ரெட்டி அவர்களையும், கார்த்தி சிவக்குமார் ஆகிய இருவரையும் யாரோ பின்நின்று தூண்டிவிடுகிறார்கள். தேர்தலில் நிற்க வேண்டிய சூழலுக்கு சரத்குமார் அணி தள்ளப்பட்டுள்ளது.

நட்பை உடைத்து விடாதீர்கள்

நட்பை உடைத்து விடாதீர்கள்

வெற்றி, தோல்வி இரண்டாவது. ஆனால் தயவு செய்து எல்லோருடைய நட்பை உடைத்துவிடாதீர்கள். நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம்.

சங்கத்தை உடைத்து விடாதீர்கள்

சங்கத்தை உடைத்து விடாதீர்கள்

நடிகர் சங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் என்ற அவர், மோதலை தவிர்க்க வேண்டும். குடும்பத்திற்குள் சண்டை ஏற்படுத்த வேண்டாம். நடிகர் சங்க கட்டிடத்தை இடித்து விட்டதாக இப்போது கேட்கும் அவர்கள், அன்றைக்கு எங்கே இருந்தார்கள் என்றார் காட்டமாக.

English summary
Actress Radhika Sarathkumar has lambasted Actors Rajini and Kamal for the Nadigar Sangam fiasco.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil