»   »  ரவுடிக்கூட்டத்தில் இணைந்த ராதிகா!

ரவுடிக்கூட்டத்தில் இணைந்த ராதிகா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் ராதிகாவும் நடித்து வருகிறார். இந்த டீம் இப்போது இணைந்து செல்ஃபி எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.

தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘நானும் ரவுடிதான்'. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பவர் நயன்தாரா.

இவர்கள் இணையும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்தமாதம் தொடங்கி பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.

விஜய் சேதுபதி – நயன்தாரா

விஜய் சேதுபதி – நயன்தாரா

நயன்தாரா உடன் ஜோடி சேர ஆசைப்பட்ட விஜய் சேதுபதியின் கனவை நனவாக்கியுள்ளார் தனுஷ். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

தாடி, மீசை விஜய் சேதுபதி

தாடி, மீசை விஜய் சேதுபதி

நானும் ரவுடிதான் படத்திற்காக விஜய் சேதுபதி தனது தாடி மற்றும் மீசைக்கு விடை கொடுத்துள்ளார். இதுதவிர, தன்னுடைய உடல் எடையையும் சற்று குறைத்துள்ளார்.

மீசை வைத்து முரட்டு தாடியோடு உள்ள கெட் அப் படமும் வெளியாகியுள்ளது.

அழகான நயன்தாரா

அழகான நயன்தாரா

அதோடு ராதிகாவுடன் ‘நானும் ரவுடிதான்' படக்குழுவினர் இணைந்து செல்ஃபி எடுத்த படமும் வெளியாகியள்ளது. பாண்டிச்சேரியில் தாடி மீசை இல்லாத விஜய் சேதுபதி மற்றும் அழகான நயன்தாரா மற்றும் திறமையான விக்னேஷ் சிவனுடன் நானும் இணைந்திருக்கிறேன் என்று ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் ராதிகா.

இளமை, குளிர்ச்சி

இளமை, குளிர்ச்சி

இதற்கு விக்னேஷ் சிவன், நீங்கள் மிகவும் இளமையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறீர்கள், இந்த குழுவில் நீங்கள் இருப்பது எங்களுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. மிகவும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

English summary
Veteran actress Radhika Sarathkumar has joined Naanum Rowdy Dhaan sets at Pondicherry.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil