»   »  ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் தங்கியிருந்த ஹோட்டல் மீது கன்னட அமைப்பினர் கல்வீச்சு

ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் தங்கியிருந்த ஹோட்டல் மீது கன்னட அமைப்பினர் கல்வீச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மைசூரு: காவிரி விவகாரம் தொடர்பாக பிரச்சனை செய்து வரும் கன்னட அமைப்பினர் சிலர் மைசூரில் பி. வாசுவின் சிவலிங்கா படக்குழு தங்கியுள்ள ஹோட்டல் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காவிரி விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பல நகரங்களில் வன்முறை வெடித்தது. பெங்களூரு, மைசூருவில் தமிழர்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன.

மேலும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

சிவலிங்கா

சிவலிங்கா

பி. வாசு சிவராஜ்குமாரை வைத்து கன்னட மொழியில் எடுத்த சிவலிங்கா படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அவர் அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து வருகிறார்.

ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ்

தமிழில் சிவராஜ்குமார் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். படத்தில் இறுதிச் சுற்று புகழ் ரித்திகா சிங்கும் உள்ளார். தமிழிலும் சிவலிங்கா என்றே பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மைசூரு

மைசூரு

சிவலிங்கா படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மைசூருவில் நடந்து வருகிறது. இதற்காக ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் மைசூருவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.

தாக்குதல்

தாக்குதல்

காவிரி விவகாரம் தொடர்பாக தொடர் தாக்குதல் நடத்தி வரும் கன்னட அமைப்பினர் மைசூருவில் சிவலிங்கா படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டல் மீது கல் வீசித் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் நல்லவேளையாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

English summary
Kannada activists pelted stones at a hotel in Mysuru where Raghava Lawrence and Shivalinga team are staying.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil