»   »  ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்.. இந்த முறை 'கெடுக்கப்' போகிறவர் ராகவா லாரன்ஸ்!

ரஜினியின் மூன்றுமுகம் ரீமேக்.. இந்த முறை 'கெடுக்கப்' போகிறவர் ராகவா லாரன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து எதிர்ப்புகள் வந்தாலும், ரஜினி படங்களை ரீமேக் செய்யும் வேலையை இன்னமும் தொடர்கிறார்கள் ரஜினியின் அபிமானி என்று சொல்லிக் கொள்ளும் நடிகர்கள்.

ராகவா லாரன்ஸ் மட்டும் சளைத்தவரா என்ன... அவரும் தன் பங்குக்கு ரஜினியின் ஒரு ப்ளாக்பஸ்டர் படத்தை எடுத்துக் 'கொல்ல'ப் போகிறார். அது மூன்று முகம்.

Raghava Lawrence to remake Rajini's Moondru Mugam

எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியாகி, வெள்ளிவிழாக் கொண்டாடிய வெற்றிப் படம் மூன்று முகம். படத்தின் கதையைவிட, அதில் தோன்றிய அலெக்ஸ் பாண்டியன் என்ற ரஜினியின் போலீஸ் கேரக்டர் தமிழ் சினிமாவின் வரலாறாகிப் போனது.

இந்த மூன்று கெட்டப்புகளையும் தான் போடக் கிளம்பிவிட்டார் ராகவா லாரன்ஸ்.

ஸ்ரீராகவேந்திரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.


English summary
Raghava Lawrence has announced that he would remake Rajini's action classic Moondru Mugam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil