Don't Miss!
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்சு கண்ணு வாங்காம பாப்பாங்க!
- News
ஓபிஎஸை இயக்குவது திமுக தான்.. அதிமுக பலத்தை நிரூபிக்க இடைத்தேர்தல் சிறந்த வாய்ப்பு.. விஜயபாஸ்கர்!
- Finance
பங்குச்சந்தை முதலீட்டாளர்களே.. இதைக் கொஞ்சம் கேளுங்க..! #பட்ஜெட் 2023
- Lifestyle
இந்த உணவுகளில் ஒன்றை காலையிலேயே சாப்பிடுவது உங்களை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்குமாம்!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Sports
திடீரென கீழே விழுந்த ஹர்திக் பாண்ட்யா.. ஒரு நிமிடம் அமைதியான மொத்த அரங்கம்.. இறுதியில் வந்த ட்விஸ்ட்
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
பிரம்மாண்ட அரண்மனை செட்.. ஐதராபாத்தில் துவங்கும் அடுத்தக்கட்ட சூட்டிங்.. மாஸ் காட்டும் சந்திரமுகி 2!
ஐதராபாத் : நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் சந்திரமுகி.
இந்தப் படத்தில் மனநல மருத்துவராக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இயக்குநர் பி வாசு இயக்கத்தில் இந்தப் படம் மிகச்சிறந்த படைப்பாக வெளியானது.
தற்போது இந்தப் படத்தின் 2வது பாகத்தை இயக்குநர் பி வாசுவே இயக்கி வருகிறார். ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தின் ஹீரோவாகியுள்ளார்.
என்றுமே
நெ.1
இடம்..எவர்
கிரீன்
ஹீரோ
ரஜினிகாந்த்..ஓடும்
குதிரையை
பார்த்து
பிரமிக்கும்
பட
உலகம்

சந்திரமுகி படம்
நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது சந்திரமுகி படம். இந்தப் படத்தில் மனநல மருத்துவராக ரஜினிகாந்த் நடித்திருந்தார். படம் ஹாரர் த்ரில்லராக உருவாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது.

ரஜினியின் கேரியர் பெஸ்ட் படம்
ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் சந்திரமுகியையும் நாம் சுட்டிக் காட்டலாம். இந்தப் படத்தில் ஆக்ஷன், காமெடி என அனைத்திலும் ரஜினி மாஸ் காட்டியிருந்தார். படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. பெரிய கட்டிலை அவர் ஒற்றைக் கையால் தூக்கி மிரட்டியபோது பிரபு மட்டுமல்ல, ரசிகர்களும் மிரண்டுத்தான் போனார்கள்.

சந்திரமுகி 2 படம்
தற்போது 17 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் 2வது பாகம் உருவாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்திற்கு பதிலாக ஹீரோவாக தற்போது ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். அவருக்கு ஹாரர் த்ரில்லர் ஒன்றும் புதிதில்லை என்பதால் அவர் இந்த கேரக்டரில் சிறப்பாக பொருந்துவார் என்று எதிபார்க்கப்படுகிறது.

ஐதராபாத்தில் அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு போடப்பட்டு, சூட்டிங் மைசூரு அரண்மனையில் நடத்தப்பட்டது. சில வாரங்கள் நீடித்த இந்த முதல்கட்ட சூட்டிங் நிறைவடைந்த நிலையில், அடுத்ததாக ஐதராபாத்தில் அரண்மனை செட் போடப்பட்டு அடுத்தக்கட்ட சூட்டிங் நடத்தப்பட உள்ளது.

10 நாட்கள் சூட்டிங்
இந்த சூட்டிங் வரும் அக்டோபர் 11ம் தேதி துவங்கவுள்ளதாகவும் தொடர்ந்து 10 நாட்கள் இங்கு சூட்டிங் நடத்தப்பட உள்ளதாகவும் முக்கியமான காட்சிகளை படமாக்க இயக்குநர் பி வாசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் நாயகியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

லாரன்ஸ் பிறந்தநாள்
இந்த மாதம் 29ம் தேதி ராகவா லாரன்சின் பிறந்தநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அன்றைய தினம் சந்திரமுகி 2 படத்தின் போஸ்டர் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக ஒரு போஸ்டர் வெளியான நிலையில், இந்த போஸ்டர் ரசிகர்களை எப்படி கவரும் என்று அதிகமான எதிர்பார்ப்பு நிலவுகிறது.