டைரக்டராக அவதாரம் எடுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்ஸ்...லாரன்ஸின் துர்கா லேட்டஸ்ட் அப்டேட்
சென்னை : நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படமான துர்கா படத்தின் டைரக்டர் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நடிகர், டைரக்டர், நடன இயக்குனர் என பல முகங்களைக் கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர் வரிசையாக பல படங்களில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இவர் லீட் ரோலில் நடிக்கும் படத்திற்கு துர்கா என பெயரிடப்பட்டுள்ளதாக சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

துர்க்கா பட போஸ்டர்
படத்தின் டைட்டிலுடன் லாரன்ஸ் வயதான தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டது. இதில் நரைத்த நீண்ட தாடி, மீசையுடன் சன்யாசி போன்ற தோற்றத்துடன் லாரன்ஸ் காணப்பட்டார். நெற்றியில் குங்குமம் மட்டும் சிவப்பு நிறத்தில் இருக்க, மற்ற அனைத்தும் பிளாக் அன்ட் ஒயிட்டில் இருப்பது போல் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதுவும் பேய் படம் தான்
போஸ்டரில் லாரன்சின் தோற்றத்தை வைத்தே இதுவும் ஒரு பேய் படம் தான் என்பதை யூகிக்க முடிந்தது. இதற்கு முன் லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற படங்கள் பேய் படங்கள் தான்.காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன், திகில் என அனைத்தும் கலந்திருந்ததால் காஞ்சனா சீரிஸ் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

டைரக்டர் யார்
பேய்க்கு பயப்படும் ஹீரோ ரோலில் நடித்து குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை ரசிக்கும் வகையில் இருந்ததால் அதே வரிசையில் துர்காவையும் பேய் படமாக உருவாக்க உள்ளார் லாரன்ஸ். இந்த படத்தை இவரே தயாரிக்கிறார். ஸ்ரீ ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் இயக்குனர்களை லாரன்ஸ் இன்று வெளியிட்டுள்ளார்.

துர்கா அப்டேட் இது தான்
இதுவரை ஸ்டன்ட் மாஸ்டர்களாக இருந்த இரட்டையர்கள் அன்பறிவ் தான் இந்த படத்தின் டைரக்டர்களாக அவதாரம் எடுக்க உள்ளனர். இவர்களை தனது படத்தில் இயக்குனராக அறிமுகம் செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள், தொழிநுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

லாரன்ஸ் போட்ட ட்வீட்
லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், துர்கா படத்தின் மூலம் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ்வை இயக்குனர்களாக அறிமுகம் செய்வது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது. ராகவேந்திரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் தயாராகும் இந்த படம் பவர் பேக்ட் படம். உங்கள் அனைவரின் ஆசிகளும் தேவை என குறிப்பிட்டுள்ளார். அதோடு, அன்பறிவ் உடன் தான் எடுத்துக் கொண்ட செல்ஃபியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இரண்டு படங்களில் பிஸி
லாரன்ஸ் தற்போது பிரியா பவானிசங்கருடன் ருத்ரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கதிரேசன் இயக்குகிறார். இதைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் அதிகாரம் படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு வெற்றிமாறன் தான் கதை எழுதுகிறார்.


Click it and Unblock the Notifications











