ஆசைப்பட்டு வாங்கிய வீட்டை இலவச பள்ளியாக மாற்றிய ராகவா லாரன்ஸ்.. அந்த மனசுதான் கடவுள்!

சென்னை: நடிகர், இயக்குனர், நடன கலைஞர் என பன்முக திறமை கொண்டவர் ராகவா லாரன்ஸ். அவரது உதவி செய்யும் குணத்திற்காக அறியப்படுகிறார். இவர் "மாற்றம்" என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இதன் மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்குகிறார். தற்போது இவர், 'காஞ்சனா 4' படப்பிடிப்பு தொடங்கியதால், அதன் முன்பணத்தை வைத்து தான் முதல் முறையாக கட்டிய வீட்டை பள்ளிக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளார்.

குரூப் டான்சரா டி. ராஜேந்திரன் இயக்கிய சம்சார சங்கீதம் என்கிற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த ராகவா லாரனஸ். அதைத்தொடர்ந்து,ஜென்டில்மேன், முட்டா மேஸ்திரி, ரக்ஷனா, அல்லரி பிரியுடு ஆகிய படங்களில் நடனமாடினார். அதன் பின், ஸ்பீட் டான்சர் படத்தில் ஒரு வேடத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் தோல்வியடைந்தது. அதன் பிறகு அவர் அஜித் குமாரின் உன்னை கொடு என்னை தருவேன், பிரசாந்தின் பார்த்தேன் ரசித்தேன் போன்ற திரைப்படங்களில் சின்ன சின்ன ரோலில் நடித்து வந்தார்.

காஞ்சனா4 : அதன் லாரன்ஸ் நடித்த முனி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று இவரின் வாழ்க்கையில் பெரும் திரும்பு முனையாக மாறியது. அதைத்தொடர்ந்து காஞ்சா படத்தை எடுத்தார். தற்போது ராகவா லாரன்ஸ் பென்ஸ், ஹண்டர், புல்லட் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் காஞ்சனா 4 படத்தை நடிப்பதோடு இயக்கியும் வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ள நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'காஞ்சனா 4' படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. நான், எப்போதும், படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினாலும், அதிலிருந்து குறிப்பிட்ட தொகையை ஒரு நல்ல காரியத்திற்கு எடுத்து வைத்துக் கொள்வேன்.

Raghava Lawrence Free school
Photo Credit:

இலவச பள்ளி: குரூப் டான்ஸராக இருக்கும் போது வாங்கிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மிச்சப்படுத்தி அதனை அம்மாவிடம் கொடுத்து விடுவேன். அம்மா அந்த பணத்தை சேர்த்து வைத்த பணத்தில் வாங்கிய நிலத்தில் கட்டிய வீடு தான் இந்த வீடு. முதல் முறையாக நான் கட்டிய வீடு. இந்த வீட்டை பசங்களுக்கு கொடுத்துவிட்டு நாம் வாடகை வீட்டிற்கு சென்றுவிடலாமா என்று அம்மாவிடம் கேட்டு அப்படி நாங்கள் கொடுத்த இந்த வீட்டை இப்போது நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தப் போகிறோம். 20 வருடங்களுக்கு முன்பு கொடுத்த இந்த வீட்டை பார்க்கும் போது ஒரு விதமான உணர்வு தோன்றுகிறது. எத்தனை பசங்க, இங்கு படித்தார்கள், சாப்பிட்டார்கள், இலவசமாக நாம் என்னென்னவோ கொடுக்கிறோம்.

ஆனால்,கல்வி கொடுத்தால் தான் சரியாக இருக்கும் என முடிவு செய்தேன். அதனால் நான் கட்டிய இந்த வீட்டை சில மாற்றங்கள் செய்து பள்ளிக்கூடமாக மாற்றி இலவச கல்வி கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். இதே வீட்டில் தான் வளர்ந்த பெண் இந்த பள்ளிக்கூடத்தின் முதல் டீச்சராகிறார். இப்போ அவர்கள் தான் நான் கட்டப் போகும் பள்ளியின் முதல் டீச்சர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அவரை ராகவா லாரன்சை மனதார பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X