»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

டொரான்டோ:

கனடா மற்றும் அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார் இந்தியாவின் முன்னணி இசையமப்ைபாளரான ஏ.ஆர். ரஹ்மான்.

இசை வெள்ளத்தால் சினிமா ரசிகர்களை கலக்கி வருபவர் ரஹ்மான். இவரது இசைக்கு உலக இசை ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதையடுத்து வெளிநாடுகளுக்குச் சென்று இசை நிகழ்ச்சிகளை ரஹ்மான் நடத்தி வருகிறார். சமீப காலத்தில் கோலாலம்பூர் மற்றும் துபாயில் அவர் இசைநிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார்.

தற்போது கனடாவில் டொரான்டோவிலும், அமெரிக்காவில் நியுயார்க்கில் அவர் இசை நிகழ்ச்சிகள் நடத்த உள்ளார். செப்டம்பர் 30-ம் தேதிடொரான்டோவில் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து நியுயார்க்கில் அவர் நிகழ்ச்சி நடத்த உள்ளார்.

டொரான்டோவில் ஸ்கைடோம் அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு ஏ.டி.என். என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந் நிகழ்ச்சியைக் காணசுமார் 30 ஆயிரம் வருவார்கள் என்று அந்த நிறுவத்தின் தலைவர் ஷான் சந்திரசேகர் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் வெளியான உடனேயே அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. அந்த அளவுக்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை ரசிகர்கள்கனடாவில் அதிகம் பேர் உள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மானின் இசைக் குழுவில் சென்னை, மும்பை, நியுயார்க், டொரான்டோ பகுதிகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் கலந்து கொள்வார்கள்.

இந்தியாவுக்கு வெளியே நடந்த ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை அதிகம் பேர் பார்த்தது இந்த நிகழ்ச்சிதான் என்று எல்லோரும் பேசும் வகையில் இந்தநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் ஷான் சந்திரசேகர்.

டொரான்டோ நிகழ்ச்சியின்போது பல ஆச்சரியப்படத்தக்க முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றார் அவர்.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil