»   »  ஓவியாவை எல்லோரும் டார்கெட் செய்தபோது கோபம் கோபமா வந்துச்சு: ரைசா

ஓவியாவை எல்லோரும் டார்கெட் செய்தபோது கோபம் கோபமா வந்துச்சு: ரைசா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் ஓவியாவை டார்கெட் செய்ததை பார்த்து கோபம் கோபமாக வந்ததாக ரைசா தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியுள்ளார் பெங்களூரை சேர்ந்த மாடல் அழகி ரைசா வில்சன். ஓவியாவை போன்று ட்விட்டரில் ரைசாவுக்கும் ஆர்மி உள்ளது.

இந்நிலையில் பிக் பாஸ் அனுபவம் பற்றி அவர் கூறியிருப்பதாவது,

100 நாட்களா?

100 நாட்களா?

பேஷன் கோரியோகிராபர் அஜீத் மேனன் சொல்லித் தான் பிக் பாஸ் தமிழ் பற்றி தெரிய வந்து கலந்து கொண்டேன். நான் ஊட்டியில் படித்ததால் எனக்கு தமிழ் தெரியும். தற்போது எனக்கு நன்றாக தமிழ் தெரியும்.

மாடல்

மாடல்

மாடல் என்பதால் எப்பொழுதும் ஷேப்பாக இருக்க வேண்டும். அப்படி இருக்கும்போது பிக் பாஸ் வீட்டில் தினமும் சோறு சாப்பிடுவது பற்றி கவலையாக இருந்தது. அங்கிருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் ஃபிட்டாகிவிடலாம் என்று நினைத்து சென்றேன்.

நல்ல அனுபவம்

நல்ல அனுபவம்

பிக் பாஸ் வீட்டில் இருந்ததன் மூலம் என்னை பற்றி நான் அறிந்து கொண்டேன். பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஓவியாவுடன் நட்பாகிவிட்டேன். ஆனால் அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தோம்.

ஓவியா

ஓவியா

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது யாருடனும் பெரிதாக சண்டை போடவில்லை. அனைவரும் ஓவியாவை டார்கெட் செய்தபோது எனக்கு அவரை பார்த்து பரிதாபமாக இருந்தது, மற்றவர்கள் மீது கோபம் வந்தது.

கதை கேட்கிறேன்

கதை கேட்கிறேன்

நான் நடிக்க தயாராக உள்ளேன். தற்போது சில படங்களுக்கு கதை கேட்டு வருகிறேன். மாடல் அழகிக்கு நடிக்க வாய்ப்புகள் வரும் என்றாலும் இம்முறை வித்தியாசமானது என்றார் ரைசா.

English summary
Model Raiza Wilson said that she was angry when the inmates of Bigg Boss house cornered actress Oviya.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil