தேவையில்லாத வேலை பார்த்து.. பொண்டாட்டியின் பெயரை கெடுத்த ராஜ் குந்த்ரா.. அவரே சொல்லியிருக்கார்!
மும்பை: தன்னுடைய வேலையில் ஏதாவது சிறிய பிரச்சனை என்றாலும் அது தன்னுடைய மனைவியின் பெயரை கெடுத்துவிடுவதாக
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா ஆபாச படங்களை தயாரித்து அவற்றை மொபைல் பேய்டு ஆப்களில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது மோசடி, ஆபாசப் செயல்களில் ஈடுபடுவது என பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாண ஆடிஷன்
நடிகை சகாரிகா ஷோனா, வெப் சீரிஸில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறிய ராஜ் குந்த்ரா தன்னை நிர்வாணமாக ஆடிஷன் செய்ய சொன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எதிரான ஆதாரங்கள்
இதனை தொடர்ந்து அப்போதே மும்பை போலீசார் ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் தற்போது அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டியுள்ள போலீசார் அவரை நேற்று இரவு கைது செய்தனர்.

ட்ரென்ட்டாகும் டிவிட்ஸ்
ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஆபாசமாக பதிவிட்ட டிவிட்டுகள் மற்றும் அவரது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரென்ட்டாகி வருகிறது. அந்த வகையில் ராஜ் குந்த்ரா நேர்காணல் ஒன்றில் பேசிய வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷில்பாவின் பெயர்தான் கெடுகிறது
அதாவது, தன்னுடைய பிஸினஸில் ஏதாவது சிறிய பிரச்சனை என்றாலும், அதில் ஷில்பா ஷெட்டியின் பெயரைதான் இழுக்கிறார்கள். ஊடகங்கள் யாரும் ராஜ்குந்த்ரா என்று கூறுவதில்லை, ஷில்பா ஷெட்டியின் கணவர் என்றுதான் கூறுகிறார்கள். இதனால் சிறிய பிரச்சனை என்றாலும் ஷில்பா ஷெட்டியின் பெயர்தான் கெடுகிறது என கூறியுள்ளார்.

பல அவதூறு வழக்குகள்
மேலும் எனது தனிப்பட்ட பிரச்சனைகள் தொடர்பான இடங்களில் எனது மனைவியின் பெயர் குறிப்பிடப்பட்டது தொடர்பாக நான் பல அவதூறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளேன். இது தவறானது, ஒரு நபர் ஒரு பிரபலத்தை திருமணம் செய்து கொண்டதால் ஒவ்வொரு முறையும் அவருடைய பெயரை டேமேஜ் செய்யக்கூடாது என்பதை ஊடகங்கள் உணர வேண்டும்.

கஷ்டமாக இருந்தது
இதன் காரணமாகவே இந்தியாவில் வேலை செய்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் உங்கள் வீடு உங்கள் இதயம் இருக்கும் இடமாகும், என்னால் முடிந்த பெஸ்ட்டை தொடர்ந்து செய்வேன். இவ்வாறு ராஜ் குந்த்ரா தனது பேட்டியில் தெரிவித்திருந்தார்.

குடும்பத்தை உடைப்பவர்
சொன்னது போலவே இந்த தேவையில்லாத வேலையை பார்த்து ஷில்பா ஷெட்டியின் பெயரை மொத்தமாக டேமேஜ் செய்துள்ளார் ராஜ் குந்த்ரா. ஷில்பா ஷெட்டிக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் இடையிலான காதல் மென்மையானது அல்ல. ராஜ் குந்த்ராவின் முன்னாள் மனைவியான கவிதா, ஷில்பா ஷெட்டி குடும்பத்தை உடைப்பவர் என பகீரங்கமாக குற்றம் சாட்டினார்

இரண்டு குழந்தைகள்
இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ராவும் ஷில்பா ஷெட்டியும் கடந்த 2009ஆம் ஆண்டு பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு விவான், சமீஷா என இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











