»   »  உதட்டில் சிறு புன்னகை.. கையில் கத்தி... என்னைக் கொல்கிறார் திரிஷா... நெகிழ்கிறார் ராஜமெளலி!

உதட்டில் சிறு புன்னகை.. கையில் கத்தி... என்னைக் கொல்கிறார் திரிஷா... நெகிழ்கிறார் ராஜமெளலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி படம் மூலம் பிரம்மாண்ட இயக்குநர்கள் வரிசையில் இணைந்துள்ள ராஜமௌலி, நடிகைகளான அனுஷ்கா மற்றும் திரிஷாவைக் கண்டு வியப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் வெளியான பாகுபலி வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் பிரம்மாண்டத்தைப் பார்த்து இந்தியாவே வியப்பில் ஆழ்ந்து கிடக்கிறது. பாகுபலியின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் தவம் கிடக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

இந்நிலையில், ராஜமௌலியை இரண்டு நாயகிகள் பெரிதும் வியக்க வைத்துள்ளனர். அவர்கள் வேறுயாருமல்ல, அனுஷ்காவும், திரிஷாவும் தான்.

இஞ்சி இடுப்பழகி...

இஞ்சி இடுப்பழகி...

சமீபத்தில் அனுஷ்காவின் ‘இஞ்சி இடுப்பழகி', திரிஷாவின் ‘நாயகி' ஆகிய படங்களின் போஸ்டர்கள் வெளியானது. அவற்றைப் பார்த்து தான் ராஜமௌலி வியந்துள்ளார்.

அழகு...

அழகு...

இது தொடர்பாக அவர் கூறுகையில், "சமீபத்தில் வெளிவந்த இரண்டு படங்களின் போஸ்டர்கள் எனக்கு மிகப்பெரிய ஆர்வத்தை கொடுத்திருக்கின்றன. ஒன்று, அனுஷ்கா நடித்துள்ள ‘இஞ்சி இடுப்பழகி' பட போஸ்டர். இது பார்க்க அழகாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

திரிஷா போஸ்டர்...

திரிஷா போஸ்டர்...

மற்றொன்று திரிஷா நடித்துள்ள ‘நாயகி' படத்தின் போஸ்டர். இதில், திரிஷா உதட்டில் சிறு புன்னகையுடன், கையில் கத்தியுடனும் பார்க்கும்போது என்னை கொல்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

பாகுபலி...

பாகுபலி...

ராஜமௌலி தற்போது ‘பாகுபலி' படத்தின் இரண்டாம் பாக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இதன் படப்பிடிப்பை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Even while everyone is raving about director Rajamouli's 'Baahubali', the ace director seems to be curious about the upcoming films of beautiful actresses Trisha and Anushka.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil