»   »  பிரமாண்ட இயக்குநர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குநர் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : செம ஹிட்டான 'பாகுபலி 2' படத்திற்கு பிறகு ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கும் படத்தை ராஜமௌலி இயக்குவதாக செய்திகள் வெளியாகி வந்தன. டிவிவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் அப்படம் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாராகும் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது தனது புதிய படம் குறித்த ஒரு தகவலை வீடியோவில் வெளியிட்டுள்ளார் ராஜமௌலி. அதில், தனது புதிய படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா நடிப்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

Rajamouli next film official announcement

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை டிவிவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், மூன்று மொழிப்படம் என்பதால் மற்ற மொழிகளில் பிரபலமான நடிகர், நடிகைகளும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. ஆனால், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என்ற இரண்டு ஹீரோக்களின் முதல் எழுத்து, மற்றும் ராஜமௌலி பெயரின் முதல் எழுத்தையும் சேர்த்து தற்காலிகமாக RRR என்று டைட்டீல் வைத்துள்ளார்கள்.

இது படத்தின் டைட்டில் அல்ல என்றும் ராஜமௌலி தெரிவித்துள்ளார். மல்டி ஸ்டாரர் படமாகத் தயாராகும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும்.

English summary
S.S.Rajamouli has released a video on his new film 'RRR'. Jr. NTR and Ramcharan has confirmed that they will act in his new film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X