ராஜமௌலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ பாடல் ஆகஸ்டில் ரிலீஸ்… தமிழில் பாடியது யார் தெரியுமா?

சென்னை : ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தின் முதல் பாடல் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பாகுபலி படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.

சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படம் தயாராகி வருகிறது. ஜனவரி மாதமே இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

ஆர்.ஆர்.ஆர்.

ஆர்.ஆர்.ஆர்.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின்ஆர்ஆர்ஆர் திரைப்படத்திற்கு தமிழில் ரத்தம் ரணம் ரௌத்திரம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் இயக்கப்பட்டு வருகிறது.

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கை வரலாறு

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. பெரும் வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி இத்திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட் மற்றும் தமிழ் நடிகர் சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முதல் பாடல் ரிலீஸ்?

முதல் பாடல் ரிலீஸ்?

இப்படத்தின் முதல் பாடல் ஆகஸ்ட் 1ந் தேதி காலை 11 மணிக்கு படக்குழு வெளியிடுகிறது. நட்பு எனும் பாடலை தமிழில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடுகிறார். பாடல் வரியை மதன் கார்க்கி எழுதி உள்ளார். இதேபோல தெலுங்கு பாடலை வேடால ஹேமச்சந்திரா பாடுகிறார். இவர் தெலுங்கில் பல வெற்றி பெற்ற பாடல்களை பாடியவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X