»   »  பத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவனா?.. கேட்கிறார் ராஜமௌலி

பத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவனா?.. கேட்கிறார் ராஜமௌலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதை வாங்கும் அளவிற்கு நான் தகுதியானவனா? என்று இயக்குநர் ராஜமௌலி கேள்வி கேட்டிருக்கிறார்.

Rajamouli says About Padma Shri Award

நேற்று மத்திய அரசு அறிவித்த பத்மஸ்ரீ விருது வாங்குவோர் பட்டியலில் இயக்குநர் ராஜமௌலியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. பாகுபலி படத்தின் உழைப்பைப் பாராட்டி இந்த விருது அவருக்கு அளிக்கப்படவிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து ராஜமௌலி "இந்த விருது குறித்து எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. இது எனக்கு கலவையான உணர்வுகளை அளிக்கிறது.

உண்மையைச் சொன்னால் இந்த விருதிற்கு நான் தகுதியானவன் கிடையாது. நான் இப்படி சொல்வதால் இதனைப் பணிவு என்று எண்ணி விடாதீர்கள்.

ரஜினிகாந்த் மற்றும் ராமோஜி ராவ் ஆகியோருக்கு பத்மவிபூஷன் விருது கிடைத்ததில் அர்த்தம் இருக்கிறது. அவர்களின் நீண்டநாள் உழைப்பு தற்போது பிரதிபலித்துள்ளது.

அதே நேரம் இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியையும், பெருமையையும் எனக்கு ஒருசேர அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

ராஜமௌலியின் இந்த கேள்வி திரையுலகிலகினர் மத்தியில் ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜமௌலி தற்போது பாகுபலி 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Baahubali Fame Director Rajamouli says About Padma Shri Award "I dont know what to say.It is quite a mixed feeling.Very frankly i don't feel I deserve the honour.This is not humility".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil