»   »  சந்தோஷ் நாராயணனுக்காக பாடகர் அவதாரம் எடுக்கும் 'தலைவர்'!

சந்தோஷ் நாராயணனுக்காக பாடகர் அவதாரம் எடுக்கும் 'தலைவர்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் வெற்றிக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் ஒரு முக்கிய காரணம். படத்தின் பாடல்கள் இன்றுவரை ஹிட் லிஸ்டில் இருக்கின்றன.

சந்தோஷ் நாராயணன் வரும் டிசம்பர் மாதம் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் லைவ் மியூசிக் கான்செர்ட் நடத்தவிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா... நெருங்குடா... பாடலை ஹைலைட்டாக ஒலிக்கவிடப் போகிறாராம்.

Rajini to appear in Santhosh Narayanan's concert in Malaysia?

அதில் கலந்துகொண்டு 'அந்த நெருப்புடா பாடலை பாட முடியுமா?' என்று ரஜினியை கேட்டுக்கொண்டிருக்கிறார்.

கபாலி படத்துக்கு சிங்கப்பூர், மலேசியா நாட்டு ரசிகர்கள் தந்த வரவேற்பால் அந்த ரசிகர்களுக்கு ஏதாவது செய்ய நினைத்துக்கொண்டிருந்த ரஜினி இதைக்கேட்டு 'நிச்சயமா பண்றேன்' என்று சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள்.

ரஜினி பாடப்போகிறார் என்று தெரிந்தால் அது இன்னொரு கபாலி அளவுக்கு தூள் கிளப்புமே...?

English summary
Sources say that Rajini has accepted to appear in Santhosh Narayanan's concert in Malaysia and perform for Neruppuda Song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil