»   »  26-ம் தேதி தாணு தயாரிக்கும் விஜய் படத் தொடக்க விழா.. பங்கேற்கிறார் ரஜினி?

26-ம் தேதி தாணு தயாரிக்கும் விஜய் படத் தொடக்க விழா.. பங்கேற்கிறார் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வரும் 26-ம் தேதி கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்கவிழா கிழக்குக் கடற்கரைச் சாலையில் நடக்கிறது.

இந்த விழாவில் ரஜினிகாந்தும் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலி படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. லண்டனில் மாமியார் வீட்டுக்குச் சென்றுள்ள விஜய், நாளை இரவு சென்னை திரும்புகிறார்.

Rajini to attend Vijay's movie launch

அட்லி படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. படத்திற்காக பிரம்மாண்ட அரங்குகள் சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.

இப்படத்தின் தொடக்க விழாவில் ரஜினி கலந்துகொள்ளப் போவதாகவும் செய்திகள் பரவியுள்ளது. ‘அட்டக்கத்தி' ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுவே தயாரிக்கவிருக்கும் நிலையில், விஜய் படத்தின் தொடக்கவிழாவில் ரஜினி கலந்து கொண்டால் சிறப்பாக இருக்கும் என கருதி, ரஜினியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் தாணு.

தாணுவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம் ரஜினி. எனவே ஜூன் 26-ம் தேதி நடக்கும் விழாவில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.

English summary
According to Sources Rajinikanth may grace his presence in the inauguration of Vijay's movie on June 26th.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil