»   »  ஏப்ரலில் ரஜினி சுற்றுப் பயணமா?

ஏப்ரலில் ரஜினி சுற்றுப் பயணமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினிகாந்த்: தமிழருவி மணியன், ராஜு மகாலிங்கம்!

சென்னை: வரும் ஏப்ரல் மாதம் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்று வெளியாகியுள்ள தகவல்களை ரஜினி தரப்பு மறுத்துள்ளது.

ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துவிட்டு, கட்சிக்கான நிர்வாகிகளை அறிவிப்பதில் மும்முரம் காட்டி வருகிறார்.

Rajini denies tour programme

இந்த நிலையில் அவர் வரும் ஏப்ரல் 14-ம் தேதி கட்சியை அறிவிப்பார் என்றும் அதே மாதத்தில் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இதனை ரஜினியின் மக்கள் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

"ஏப்ரலில் ரஜினி தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்வார் என்பது அதிகாரப்பூர்வ தகவல் அல்ல. இதுவரை அப்படி எதுவும் உறுதியாகவில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் இன்றும் நாளையும் வெவ்வேறு மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் நியமனம் நடைபெற உள்ளது.

English summary
Rajinikanth's PRO has denied that there is no tour programme for the actor in April

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil