»   »  வீர துறந்தரா... குழந்தைகளை மறந்தாரா... ஏன் இந்த விபரீத முயற்சி ‘கபாலி’?

வீர துறந்தரா... குழந்தைகளை மறந்தாரா... ஏன் இந்த விபரீத முயற்சி ‘கபாலி’?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓவர் பில்டப் கொடுத்த படங்கள் சமயத்தில் பலத்த விமர்சனத்திற்கு ஆளாகி ஊத்திக் கொள்வது உண்டு. அந்தவகையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசான கபாலி படம், ரஜினியின் படமாக அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்தியிருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

முன்னணி இயக்குநர்களை ஒதுக்கி, அட்டக்கத்தி, மெட்ராஸ் என இரண்டு வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கிறார் என்ற போதே, பலரின் புருவங்கள் உயர்ந்தன. ஆனால், அவை ஆச்சர்யத்தால் மட்டுமல்ல, இது சாத்தியமாகுமா என்ற சந்தேகத்தினாலும் தான்.

ஆனால், போஸ்டர், டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து அதிரடி கிளப்பியது கபாலி. படத்தலைப்பிலேயே புதிய புரட்சி செய்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடினர்.

முதல் நாள்... முதல் ஷோ...

முதல் நாள்... முதல் ஷோ...

அதற்கேற்றார்போல், விமானத்தில் ரஜினி உருவத்தை வரைந்தது உட்பட பல்வேறு வகைகளில் தன் விளம்பரத் திறமையை நிரூபித்தார் தயாரிப்பாளர் தாணு. இதனால், முதல் நாள் முதல் ஷோவிலேயே கபாலியைத் தரிசித்து விட வேண்டும் என்ற கண்ணுக்குத் தெரியாத நெருக்கடிக்கு தள்ளப்பட்டார்கள் ரசிகர்கள்.

லீவு விட்ட ஆபிசுகள்...

லீவு விட்ட ஆபிசுகள்...

இதற்குத் தகுந்தாற்போல் தேர்தலுக்கு விடுமுறை அளிக்கத் தயங்கிய பல கார்ப்பரேட் நிறுவனங்கள் கூட, இலவச டிக்கெட் கொடுத்து, கூடவே சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் கொடுத்து ஊழியர்களை கபாலி பார்க்க அனுப்பி வைத்தனர்.

கபாலி திருவிழா...

கபாலி திருவிழா...

இதனால் தமிழகமே கபாலி ரிலீசைத் திருவிழாவாகக் கொண்டாடியது. எங்கெங்கு காணினும் ரஜினி பேச்சாகவே இருந்தது. இதனால், நூறு ரூபாய் டிக்கெட்டைக் கூட ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்க ரசிகர்கள் சிறிதும் யோசிக்கவில்லை.

கபாலி காய்ச்சல்...

கபாலி காய்ச்சல்...

அவர்களது மனம், உடல் என அனைத்திலும் கபாலி காய்ச்சல் ஆக்கிரமித்திருந்தது. ஆனால், இதெல்லாம் பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்த்த ரசிகர்கள் தியேட்டரில் இருந்து வெளியே வரும் வரை தான்.

குழப்பம்...

குழப்பம்...

காரணம் அவர்கள் முகத்தில் அப்படியொரு குழப்பம். ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி படமாக கபாலி இருக்கும் என எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு இது யாருடைய படம் என்ற கேள்வி தலைக்குள் குடைந்தது தான்.

காமெடி மிஸ்ஸிங்...

காமெடி மிஸ்ஸிங்...

வழக்கமாக தனது படங்களில் காமெடி நடிகர்கள் இருந்தாலுமே கூட, தன் பங்கிற்கு பார்வையாளர்களை சிரிக்க வைப்பது ரஜினியின் பாலிசி. இதனாலேயே வயது வித்தியாசமில்லாமல் சிறுவர் முதல் வயதானவர் வரை அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். டான் படமான பாட்ஷாவில் ஆகட்டும், பேய்ப்படமான சந்திரமுகியில் ஆகட்டும் தன் பங்கிற்கு காமெடியில் கலக்கியிருப்பார் ரஜினி.

ஏமாற்றம்...

ஏமாற்றம்...

ஆனால், கபாலியில் மறந்தும் ரசிகர்களை சிரிக்க விடாமல் ரஜினி சீரியசாக நடித்திருப்பது ரசிகர்களுக்கு மாபெரும் அதிர்ச்சி. நெருப்புடா பேசி ரஜினியைப் பார்க்க ஓடிச் சென்ற குழந்தைகளுக்கு பெரும் ஏமாற்றம். சில நாடுகளில் கபாலி படத்திற்கு குழந்தைகளை அழைத்து வரக்கூடாது எனத் தடையே போட்டிருக்கிறார்களாம். அந்தளவிற்கு படத்தில் சண்டைக்காட்சிகள், வன்முறை அதிகம்.

இதுவல்ல அவர்கள் கேட்பது...

இதுவல்ல அவர்கள் கேட்பது...

சரி நகைச்சுவை தான் இல்லை, டச்சிங்கான கதையாவது இருக்கிறதா என்றால் அதையும் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது. தன் வயதுக்கேற்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் ரஜினி. அதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், ரசிகர்கள் எதிர்பார்ப்பது அதுவல்லவே.

மைனஸ்...

மைனஸ்...

ஸ்டைலான நடை, துள்ளல் நடிப்பு, சிரித்த முகம், கொஞ்சம் கொஞ்சம் காமெடி, அதிரடி பஞ்ச் இப்படியாக பழக்கப்பட்டுப்போன ரஜினி ரசிகர்களுக்கு, இப்படம் யானைப்பசிக்கு சோளப்பொறி தான். ஆரம்பக் காட்சியில் சிறை வளாகத்திலேயே தன் பலத்தை சோதித்துப் பார்த்துவிட்டு வெளியே வரும் ரஜினியை ரசிக்க முடிகிறது. ஆனால், அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அந்த வேகம் மிஸ் ஆவது தான் பெரிய மைனஸ்.

ஒட்டாத பாடல்கள்...

ஒட்டாத பாடல்கள்...

மனைவிக்காக, மகளுக்காக என உருகும் காட்சிகளைத் தவிர, ரஜினியிடம் நாம் எதிர்பார்க்கும் பெரும்பாலான விசயங்கள் இப்படத்தில் மிஸ்ஸிங். பாடல்களைத் தனியா கேட்டபோது ருசித்த அளவிற்கு, காட்சிகளோடு ஒட்டவில்லை என்றுதான் கூற வேண்டும்.

ஏமாற்றிய கபாலி...

ஏமாற்றிய கபாலி...

ஏற்கனவே லிங்கா எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப் பெறாத போது, அடுத்த படத்தில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டாமா ரஜினி. இப்படித்தான் பாபா படத்தின் போது கையைச் சுட்டுக் கொண்டார் ரஜினி. ஆனால், சுதாரித்துக் கொண்டு சந்திரமுகியைத் தந்து மீண்டும் தன் ஸ்டைல், சுறுசுறுப்பு என அனைத்தையும் நிரூப்பித்தார். அப்படியாக லிங்கா தோல்வியில் இருந்து ‘திரும்பி வந்திருப்பார்' என எதிர்பார்க்கப்பட்ட கபாலி ஏமாற்றத்தைத் தான் தருகிறது.

டான்... டான்...

டான்... டான்...

டான் படங்களில் நடிப்பது ரஜினிக்கு இது முதன்முறையல்ல, ஏற்கனவே பில்லா, பாட்ஷா என அதிரடி டான்களாக அவரைப் பார்த்துள்ளோம். அப்படியிருக்கையில் கபாலி டான்களுக்கு டானாக இருக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்ததில் தப்பில்லையே ரஞ்சித் சார்?

இது தான் காரணமா..?

இது தான் காரணமா..?

இதே கதைக்களத்தை தமிழகத்தைக் கொண்டு எடுத்திருந்தால் பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கும் என்பதால், மலேசியாவிற்குப் படத்தைத் தூக்கிச் சென்ற ரஞ்சித்தின் புத்திசாலித்தனம், படத்தின் மற்ற இடங்களில் தோற்றுப் போய் இருக்கிறது. சர்ச்சைகளுக்கு பயந்து தான், அவர் மலேசிய கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் என்பது மலேசியாவைக் காட்சிப் படுத்தியிருப்பதிலேயே தெரிகிறது.

மகிழ்ச்சி...

மகிழ்ச்சி...

அதிரடி பஞ்ச் வசனங்களால் ரசிகர்களை திக்குமுக்காட வைப்பார் என எதிர்பார்த்தால், ‘மகிழ்ச்சி' என முதல் டயலாக்கிலேயே சாப்டாக பேசி கடந்து செல்கிறார் ரஜினி. அதே நல்ல தாதாவுக்கும், கெட்ட தாதாவுக்குமான பாட்ஷா ஸ்டைல் கதை தான். ஆனால், விறுவிறுப்பு தான் இல்லை.

ஏன் இந்த விஷப்பரீட்சை...

ஏன் இந்த விஷப்பரீட்சை...

ரஜினி பற்றிய ரசிகர்களின் பிம்பங்களை உடைப்பது போல் அமைந்துள்ளது கபாலி. ஆனால், இது அதற்கான நேரமல்ல, தேவையுமல்ல. ஏற்கனவே, தமிழின் சூப்பர்ஸ்டாராக யாராலும் அசைத்துப் பார்க்க முடியாத சிம்மாசனத்தில் அமர்ந்துள்ள ரஜினியை வைத்து, நகைச்சுவையில்லாத, பழைய கதையை டிங்கரிங் பார்த்து ரஞ்சித் எடுத்திருப்பது நிச்சயம் விஷப் பரீட்சை தான்.

ரஜினி எனும் மந்திரம்...

ரஜினி எனும் மந்திரம்...

படத்தில் ஒரே ஆறுதல் ரஜினி மரங்களைச் சுற்றி வந்து, காதல் டூயட் பாடவில்லை என்பது மட்டும் தான். மற்றபடி, படத்தின் மொத்த மைனஸ்களையும் ரஜினி என்ற மந்திரத்தால் மறைக்கப் பார்த்திருக்கிறார் ரஞ்சித்.

English summary
Rajini's Kabali is a big disappointment for fans as it is a director's movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil