twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விருதுகளும் பெருமை கொள்ளும் தலைவன்... ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Rajinikanth ஹேஷ்டேக்!

    |

    சென்னை : மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

    மேலும் விருது கிடைக்கும்னு எதிர்பார்க்கவில்லை என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

    டெல்லி செல்லும் முன், செய்தியாளர்களிடம் ரஜினிகாந்த் இதனை தெரிவித்தார். இந்த செய்தியை அவரது ரசிகர்கள் ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

    கிராமத்தானாக கோபப்படும் ரஜினிகாந்த்... காட்டாறு... வெளியானது அண்ணாத்த டீசர்! கிராமத்தானாக கோபப்படும் ரஜினிகாந்த்... காட்டாறு... வெளியானது அண்ணாத்த டீசர்!

    தாதா சாகேப் பால்கே விருது

    தாதா சாகேப் பால்கே விருது

    இந்திய திரையுலகினருக்கு மத்திய அரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.

    வாழ்த்து

    வாழ்த்து

    2019-ம் ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்த்துக்கு அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு திரையுலகினரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழா நடத்தப்படாமல் இருந்தது. டெல்லியில் நாளை நடைபெறும் விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படவுள்ளது.

    நான் எதிர்பார்க்கவில்லை

    நான் எதிர்பார்க்கவில்லை

    இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி புறப்பட்டு சென்ற அவர், முன்னதாக வீட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது வாங்குவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நான் விருது பெறும் இந்த தருணத்தில் கே.பாலசந்தர் இல்லையே என்பது வருத்தமாக உள்ளது.விருது வாங்குவேன் என எதிர்பார்க்கவில்லை. மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றார்.

    ரஜினிகாந்த் அறிக்கை

    ரஜினிகாந்த் அறிக்கை

    மேலும், இதனிடையே ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்க உள்ளது.

    Hoote App

    Hoote App

    இரண்டாவது, என்னுடைய மகள் சௌந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய "HOOTE"என்கிற APP-ஐ உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார். அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துக்களையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் "HOOTE APP மூலமாக பதிவிடலாம்... இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான "HOOTE APP ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்" இவ்வாறு கூறினார்.

    கருப்பு, கம்பீரம்

    கருப்பு, கம்பீரம்

    ரஜினிக்கு தாதாசாகேப் விருது வழங்கப்படுவது குறித்து ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரக்கு வாழ்த்துக்குகூறி வைரலாக்கி வருகின்றனர். அதில் ஒரு இணையவாசி உழைப்பு கருப்பு கம்பீரம், ஸ்டைல், எளிமை இவைகளுக்கு உருவமாக இருப்பவர் என்று பதிவிட்டுள்ளார்.

    பெருமை கொள்ளும்

    பெருமை கொள்ளும்

    மற்றொருவர், விருதுகளும் பெருமை கொள்ளும் தலைவன் கையில் செல்லுகையில் என்று கூறியுள்ளார்.

    ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

    ஹேஷ்டேக் ட்ரெண்டிங்

    விருதுகள் வியந்து பார்க்கும் வீரன் என்றும், வாழ்த்துக்கள் என்றும் ரஜினிகாந்தை புகழ்ந்து #Rajinikanth என்ற ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

    English summary
    Rajini fans trend Superstar Rajinikanth hashtag on twitter
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X