»   »  கண்ணா, பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...!

கண்ணா, பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்த நடிகர்களுள் முக்கியமானவர் ரஜினி. அவரது பெயரைப் போலவே, அவரது படப் பெயர்களுக்கும் மவுசு கூடி வருகிறது.

சமீபகாலமாக ரஜினியின் பழைய படப் பெயர்களை புதிய சினிமாவிற்கு வைப்பது அதிகரித்து வருகிறது.

அறிமுக நடிகர்கள் மட்டுமின்றி, பிரபல நடிகர்களும் தங்களது படத்திற்கு ரஜினியின் வெற்றிப்பட தலைப்பை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

பில்லா...

பில்லா...

ரஜினி நடித்து பெரிய வெற்றியைப் பெற்றத் திரைப்படம் பில்லா. இதனை அப்படியே ரீமேக் செய்து அதே தலைப்பில் அஜீத் நடித்தார். பின்னர் அதன் இரண்டாம் பாகமும் வெளியானது. தற்போது மூன்றாம் பாகத்தின் தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

மாப்பிள்ளை...

மாப்பிள்ளை...

மாமியார், மருமகனுக்கு இடையில் நடக்கும் பிரச்சினைகளைக் கதைக்களமாக கொண்டு ரஜினி- ஸ்ரீவித்யா நடிப்பில் வெளியான படம் மாப்பிள்ளை. அப்படத்தின் ரீமேக்கில் ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் நடித்திருந்தார். மாப்பிள்ளை என்ற பழைய தலைப்பிலேயே அப்படம் ரிலீசானது.

தில்லுமுல்லு...

தில்லுமுல்லு...

பாலச்சந்தர் இயக்கத்தில் வித்தியாசமான இரட்டைக் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருந்த படம் தில்லுமுல்லு. இப்படத்தின் ரீமேக்கும் அதே பெயரில் வெளியானது.

பொல்லாதவன்...

பொல்லாதவன்...

இதேபோல், ரஜினியின் பொல்லாதவன் படத்தலைப்பு தனுஷின் படத்திற்கு வைக்கப்பட்டது. இது ரஜினி படத்தின் ரீமேக் இல்லையென்ற போதும், தலைப்பு மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

தங்கமகன்...

தங்கமகன்...

சமீபத்தில் தனுஷ் நடித்து வெளியான தங்கமகன் படமும் ரஜினியின் பழைய படத்தின் தலைப்பே. ஆனால், இரண்டு படங்களும் வெவ்வேறு கதைக்களங்களைக் கொண்டவை.

போக்கிரிராஜா...

போக்கிரிராஜா...

இது தவிர ஜீவா தற்போது நடித்து வரும் படத்திற்கு போக்கிரி ராஜா என்றும், விஜய் சேதுபதி நடித்து வரும் புதிய படத்திற்கு தர்மத்துரை என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இவையும் ரஜினியின் பிரபல படப்பெயர்களே.

மனிதன்...

மனிதன்...

இந்த வரிசையில் தற்போது புதிதாக உதயநிதி ஸ்டாலினும் இணைந்துள்ளார். அவரது ஜாலி எல் எல் பி படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு மனிதன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதுவும் ரஜினி நடித்த வெற்றி படங்களில் ஒன்றாகும்.

ரஜினி படத்தலைப்புகள்...

ரஜினி படத்தலைப்புகள்...

ஏண்டா தலைல எண்ணெய் வைக்கல, யோக்கியன் வர்றான் சொம்பை எடுத்து உள்ளவை, வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் என ரணகளமாக ஒரு புறம் படங்களுக்கு சிலர் பெயர் வைத்துக் கொண்டிருக்க, அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் ரஜினியின் வெற்றிப் படங்களின் தலைப்புகளை தங்களது படங்களுக்கு சூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

என்னவோ பண்ணித் தொலைங்கடா.. (கண்டிப்பாக இது படப் பெயர் இல்லைங்க..மைண்ட் வாய்ஸ்)

English summary
Now in tamil cinema, the famous directors and actors are choosing Rajini's old movie title for their new movies.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil