»   »  எனக்குப் போட்டியே ரஜினிதாங்க.. சொல்வது "சூப்பர் பவர்" சீனி!

எனக்குப் போட்டியே ரஜினிதாங்க.. சொல்வது "சூப்பர் பவர்" சீனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எனக்குப் போட்டியே ரஜினிதான் என்று பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்திருக்கிறார்.

'வாங்க வாங்க' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் அப்புக்குட்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Rajini is the Competitor for me says Power Star Srinivasan

விழாவில் நடிகர் சீனிவாசன் பேசும்போது ''சினிமாவில் முன்பெல்லாம் சில்க்கை அதிகமாக கூப்பிட்டார்கள்.இப்போது என்னை அதிகமாக கூப்பிடுகிறார்கள். இதனால் நான் ஆம்பள சில்க்கா இல்லை பொம்பள சில்க்கா என்று எனக்கே தெரியவில்லை.


இன்று நான் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நான் பட்ட கஷ்டங்கள் தான். இப்போது எனக்கென்று ரசிகர்கள் இருக்கிறார்கள்.


இதனைப் பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இதனால் சினிமாவிற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றுகிறது.


சினிமாவில் எனக்குப் போட்டியாக நான் கருதுவது ரஜினியைத் தான். ரஜினி இன்று இந்த நிலையில் இருக்க அவர் பட்ட கஷ்டங்களே காரணம் என்பது எனக்குத் தெரியும்.


அவர் போலவே நானும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்'' என்று கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சீனிவாசன் சமீபத்தில் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Vaanga Vaanga Audio Launch Held at Yesterday in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil