Don't Miss!
- Finance
மாதம் ரூ.5000 வருமானம் வேண்டுமா..அஞ்சலகத்தோடு MIS திட்டம் தான் சரியான சாய்ஸ்..!
- News
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி.. நாடாளுமன்றத் தேர்தலிலும் எதிரொலிக்கும்.. செங்கோட்டையன் நம்பிக்கை
- Technology
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Lifestyle
வார ராசிபலன் 29 January to 04 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்!
- Sports
லக்னோவில் காத்திருக்கும் ஆபத்து.. டாஸ் ஃபார்முலா ஓர்க் அவுட் ஆகாது.. என்ன செய்வார் ஹர்திக் பாண்டியா
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அன்புத் தம்பி... முதலாளி... தளபதியின் மகனே... அமைச்சர் உதயநிதியை வாழ்த்திய ரஜினி, கமல், வைரமுத்து
சென்னை: ரெட் ஜெயன்ட் தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் உதயநிதி.
தொடர்ந்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக பொறுப்பேற்றார்.
அரசியல், சினிமா என இரண்டு தளங்களிலும் பயணித்து வந்த உதயநிதி, இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாமன்னன் கடைசி படம்.. நடிப்புக்கு முழுக்கு போட்ட உதயநிதி ஸ்டாலின்.. அப்போ ரெட் ஜெயண்ட் மூவிஸ்?

அமைச்சர் உதயநிதி
தயாரிப்பாளராக திரையுலகில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின், ஒருகட்டத்தில் ஹீரோவாகவும் வலம் வரத் தொடங்கினார். ஒரு கல் கண்ணாடி, மனிதன், சைக்கோ, கலகத் தலைவன் போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ள உதயநிதி, தற்போது 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவான உதயநிதி, இன்று அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

அன்புத் தம்பிக்கு ரஜினியின் வாழ்த்து
அமைச்சர் பொறுப்பேற்றுக்கொண்ட உதயநிதி, மாமன்னன் தான் தனது கடைசித் திரைப்படம் என அறிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் என மொத்தம் மூன்று துறைகள் உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து உதயநிதி தனது டிவிட்டரில் பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றுவேன் என பதிவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அதில், "தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துகிறேன் தம்பி - கமல் ட்வீட்
அதேபோல் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துத் தெரிவித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி, அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது" என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தளபதி மகனே வருக - வைரமுத்து வாழ்த்து
மேலும், பாடலாசிரியர் வைரமுத்துவும் உதயநிதிக்கு வாழ்த்துக் கூறி ட்வீட் செய்துள்ளார். "உள்ளங்கவர் உதயநிதி! கலைஞர் குடும்பம் உங்களுக்குத் தந்தது அறிமுகம் மட்டும்தான். இன்னொரு முகம் இருக்கிறது; அறிவு முகம்; செயலால் மட்டுமே அடைவது உங்கள் செயலால் வாரிசு என்ற வசை கழியுங்கள் தளபதி மகனே வருக தமிழர்க்கு மேன்மை தருக அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள்" என தனது கவிதை நடையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துகள் முதலாளி - சந்தானம் ட்வீட்
நடிகரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான சந்தானமும் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்தப் பதிவில் "நம்ம இன்னும் நிறைய கோப்பைகளும் பந்தையங்களும் போட்டிகளும் உலக மேடையில ஜெயிக்கனும்! இந்த கனவு இனி தமிழ்நாட்டுல நனவாக வாழ்த்துகள் முதலாளி உதயநிதி" எனக் குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் பல படங்களில் சந்தானம் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இயக்குநர் மாரி செல்வராஜும் அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது டிவிட்டர் பதிவில், "இன்று தமிழக அமைச்சரவையில் பங்கேற்கும் எங்கள் மரியாதைக்குரிய உதயநிதி சார் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ப்ரியமும் மாமன்னன் படக்குழு" என பதிவிட்டுள்ளார்.