»   »  கமலும், ரஜினியும் அறிவாளி அரசியல்வாதிகள்: சொல்வது யார் தெரியுமா?

கமலும், ரஜினியும் அறிவாளி அரசியல்வாதிகள்: சொல்வது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி, கமல் பேசவேண்டியது என்ன?- வீடியோ

சென்னை: கமல் ஹாஸனும், ரஜினிகாந்தும் அறிவாளி அரசியல்வாதிகள் என்று பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை துவங்கி பரபரப்பான அரசியல்வாதியாகிவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி துவங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி கூறியிருப்பதாவது,

நகரம்

நகரம்

ஏதாவது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நான் அடிக்கடி சென்னை வருவது உண்டு. எனக்கும் சென்னைக்கும் இடையேயான தொடர்பு சினிமாவால் ஏற்பட்டது. வடக்கில் உள்ளவர்களுக்கு தெற்கு என்றால் மெட்ராஸ் தான்.

கமல்

கமல்

நான் சினிமா துறையில் இருப்பதற்கு ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் தான் காரணம். மங்களூரில் வசித்தபோது அவர்களின் படங்களை பார்த்து தான் நடிக்க கற்றுக் கொண்டேன்.

அரசியல்

அரசியல்

ரஜினியும், கமலும் அரசியலுக்கு வந்துவிட்டாலும் அவர்கள் இன்னும் என் ஹீரோக்கள் தான். அவர்கள் சின்சியரானவர்கள், ரசிகர்களை பற்றி தெரிந்து வைத்துள்ளவர்கள், கடின உழைப்பாளிகள், அறிவாளிகள்.

அரசியல்வாதிகள்

அரசியல்வாதிகள்

கமல் ஜி, ரஜினி ஜி போன்ற அறிவாளி அரசியல்வாதிகளை ஏற்றுக் கொள்ள இந்தியர்கள் தயாராக இருக்க வேண்டும். அவர்கள் இருவருக்கும் ஏதாவது தேவைப்பட்டால் உடனே அவர்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பேன்.

வில்லன்

வில்லன்

தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரமாக உள்ளது. பாசிட்டிவ் கதாபாத்திரமாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Suniel Shetty said in an interview that Rajinikanth and Kamal Haasan are intellectual politicians. He added that he is in film industry because of them.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil