»   »  'வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!' - திருப்பூர் சுப்பிரமணியம்

'வேந்தர் மூவீசுக்கு படம் பண்ணுவதாக ரஜினி சொல்லவே இல்லை!' - திருப்பூர் சுப்பிரமணியம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேந்தர் மூவீசுக்கு படம் செய்து தருவதாக ரஜினி எந்த விதமான வாக்குறுதியும் தரவில்லை. அதுபற்றி யாரிடமும் அவர் பேசவும் இல்லை, என்று பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

லிங்கா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்ட ரஜினி தரப்பிலிருந்து பனிரெண்டரைகோடி கொடுக்கப்பட்டதென்றும் அதனால் அந்தச் சிக்கல் முடிவுக்கு வந்துவிட்டதென்றும் சொல்லப்பட்டது. அது குறித்த ஒப்பந்தப் பத்திரம் கையெழுத்திடப்பட்டு, அதை தாணுவிடமிருந்து பெறுவது போல போஸ் கொடுத்த விநியோகஸ்தர் சிங்காரவேலன்தான், இப்போது ரஜினி வேந்தர் மூவீசுக்கு படம் பண்ண வேண்டும் அல்லது மேலும் ரூ 15 கோடி தர வேண்டும் என பேட்டியளிக்கிறார்.

Rajini never says to do movie for Vendhar, says Tiruppur Subramaniyam

மே 26 ஆம் தேதி பத்திரிகையாளர்களைச் சந்தித்த சிங்கார வேலன், 'சொன்னபடி பணம் வரவில்லை. ஐந்து கோடியே தொண்ணூறு லட்சம்தான் கொடுத்திருக்கிறார்கள். மீதி ஆறு கோடியே ஒரு லட்சம் இதுவரை வந்து சேரவில்லை' என்றார்.

அதோடு பனிரெண்டரை கோடி என்பதை ஒப்புக்கொண்டதற்குக் காரணமே, அடுத்து ரஜினி வேந்தர் மூவிஸூக்கு ஒருபடம் நடித்துத் தருவார் என்றும் அந்தப் படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் இணை தயாரிப்பாளர்களாகி விடுங்கள்.

அந்தப் படத்தில் கிடைக்கும் லாபம் உங்களுக்கு முழுமையான நிவாரணமாக இருக்கும் என்று ரஜினி சார்பில் திருப்பூர் சுப்பிரமணி வாய் மொழியாகச் சொன்னதாகவும் தெரிவித்தார்கள்.

இதுபற்றி திருப்பூர் சுப்பிரமணியிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, இது கடைந்தெடுத்த பொய் என்றார்.

பனிரெண்டரை கோடியில் ஆறரைக் கோடியைக் கொடுக்கவில்லை என்று சொல்கிறார்களே?

எங்களுக்கு ராக்லைன் வெங்கடேஷிடமிருந்து ஆறு கோடிதான் வந்தது. அதைப் பிரித்துக் கொடுத்துவிட்டோம். மீதிப்பணம் வந்ததும் அதையும் பிரித்துக் கொடுத்துவிடுவோம். அவர் மகள் கல்யாணம் முடிந்ததும் இந்த செட்டில்மென்ட் முடிந்துவிடும்.

ராக்லைன் வெங்கடேஷ் மொத்தத் தொகையையும் கொடுத்துவிட்டார் என்றும் நீங்களும் தாணுவும்தான் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தராமல் இருக்கிறீர்கள் என்று சிங்காரவேலன் சொல்கிறாரே?

அவர் சொல்வது அனைத்துமே கடைந்தெடுத்த பொய்கள். எங்களுக்கு வந்தது ஆறு கோடிதான் அதைக் கொடுத்துவிட்டோம். நீங்கள் வேண்டுமானால் ராக்லைன் வெங்கடேஷிடமே கேட்டுக் கொள்ளலாம்.

வேந்தர் மூவிஸூக்கு ரஜினி ஒருபடம் நடித்துத் தருவார் என்று நீங்கள் வாய்மொழி உத்தரவாதம் கொடுத்ததாகச் சொல்லுகிறார்களே?

ரஜினி சாரும் அப்படிச் சொல்லவில்லை, நானும் அப்படி ஒரு வாக்குறுதி அவர்களிடம் கொடுக்கவில்லை, மொத்தமாகப் பொய் சொல்லுகிறார்கள். ரஜினி சார் என்றைக்குமே இப்படி வாக்குறுதிகள் தந்ததில்லை. வெறும் பப்ளிசிட்டிக்காக திரும்பத் திரும்ப இப்படி பொய்களைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிங்கார வேலன். வந்த வரை லாரம் என்று அவருடன் இருக்கும் சிலரும் அமைதியாக அவருக்கு உடன்படுகிறார்கள். மீடியாக்கள் இதற்கு முக்கியத்துவம் தருவதுதான் வருத்தமாக உள்ளது.

English summary
Leading distributor Tiruppur Subramaniyam says that Rajini never says to do a movie for Vendhar movies to compensate Lingaa loss.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil