»   »  2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழா... மும்பை சென்றார் ரஜினி!

2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழா... மும்பை சென்றார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்திரன் 2 அல்லது 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழாவுக்காக மும்பை புறப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

லைகா நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பாக வெளி வரவிருக்கும் 2.0 படத்துக்கு உலகெங்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களின் கைவண்ணத்தில், முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் படத்துக்கு நிகராக 2.0 உருவாகி வருகிறது.

Rajini reaches Mumbai for 2.0 first look launch

அதுமட்டுமல்ல, தமிழில் உருவாகி வரும் முழுமையான 3டி படமும் இதுதான். படப்பிடிப்பு முழுவதையும் 3 டி தொழில்நுட்பத்திலேயே உருவாக்கி வருகிறார் ஷங்கர்.

படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா மும்பையில் பிரமாண்டமாக நடக்கிறது. இந்த விழாவில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்தார். அவர் வருவதை அறிந்து முன்கூட்டியே திரண்ட ரசிகர்கள் அவருக்கு கையசைத்து வழியனுப்பினர்.

விமானம் மூலம் மும்பை சென்ற ரஜினியை மும்பை ரசிகர்கள் வரவேற்றனர்.

நாள் மாலை 4 மணிக்குத் தொடங்கி, விழா முடியும் வரை நேரலையாக யுட்யூபில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது லைகா நிறுவனம்.

Read more about: rajini, first look, ரஜினி
English summary
Superstar Rajinikanth has departed to Mumbai to attend the first look launch of 2.0 movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil