»   »  ரஜினியின் 2.O ஃபர்ஸ்ட் லுக்... மும்பையில் நவம்பர் 20-ம் தேதி பிரமாண்ட விழா!

ரஜினியின் 2.O ஃபர்ஸ்ட் லுக்... மும்பையில் நவம்பர் 20-ம் தேதி பிரமாண்ட விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள 2.O படத்தின் முதல் தோற்றத்தை வரும் நவம்பர் 20 தேதியன்று மும்பையில் பிரமாண்ட விழாவில் வெளியிடுகிறார்கள்.

சர்வதேச அளவில் பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ரஜினியின் 2.O. லைகா புரோட்க்ஷன்ஸின் மிகப் பிரம்மாண்ட தயாரிப்பு, ஷங்கரின் இயக்கம், ரஜினியின் ஸ்டைல் மந்திரம், அக்‌ஷய்குமார் மற்றும் ஏ.ஆர்.ரஹமான் என பலர் இப்படத்தில் இணைந்ததே இதற்குக் காரணம்.

Rajini's 2.O first look on Nov 20th

நவம்பர் 20ம் தேதி '2.0' படக்குழு படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட பிரம்மாண்டமான விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது லைகா புரொட்க்ஷன்ஸ்.

மும்பையில் உள்ள யாஷ் ராஜ் ஸ்டுடியோஸில் மாலை 5 மணிக்கு இவ்விழா நடைபெற இருக்கிறது. இவ்விழா முழுவதும் லைக்கா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யு-டியூப் பக்கத்தில் (https://www.youtube.com/LycaProductions) நேரடியாக ஒளிபரப்பபட இருக்கிறது. மேலும் லைகாவின் மொபைல் ஆப் (Andriod & IOS) மூலமாகவும் இந்நிகழ்வை நேரடியாகக் காணலாம்.

இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், அக்‌ஷய்குமார், படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஏமி ஜாக்சன் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்விழாவை பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்குகிறார்.

"முதன் முறையாக '2.O' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவரவிருக்கிறது. எப்போதுமே எந்தவொரு விஷயத்தில் புதுமையை விரும்பும் இயக்குநர் ஷங்கர், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விஷயத்திலேயே தனது புதுமையை தொடங்கிவிருக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளது லைகா நிறுவனம்.

English summary
Rajinikanth's 2.O movie first look will be unveiled on November 20th in Mumbai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil