twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோக் நீர்வீழ்ச்சியில் ரஜினியின் லிங்கா இறுதிக்கட்ட படப்பிடிப்பு.. ரசிகர்கள் படையெடுப்பு

    By Shankar
    |

    ஷிமோகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சிப் பகுதியில் ரஜினிகாந்தின் லிங்கா படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

    கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் லிங்காவின் முதல் கட்ட படப்பிடிப்பை மைசூரில் முடித்தனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்தது.

    தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் ஷிமோகா பகுதியில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் நடத்துகின்றனர்.

    க்ளைமாக்ஸ்

    க்ளைமாக்ஸ்

    படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியும் இங்கேயே படமாகிறது. துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்பட 3 ஆயிரம் பேர் படப்பிடிப்பில் பணியாற்றுகின்றனர்.

    பெரும் கூட்டம்

    பெரும் கூட்டம்

    இதனால் அருவி பகுதியில் பெரும் கூட்டத்தை காண முடிகிறது. அவர்களுக்கு உணவு சமைத்து கொடுக்க 100 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக சமையல் கூடங்களில் உணவு தயாரிப்பு நடக்கிறது.

    ரசிகர்கள்

    ரசிகர்கள்

    நடிகர், நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் தங்க அருவி கரையோரம் சிறு சிறு குடில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்பை காண தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அப்பகுதியில் திரள்கிறார்கள்.

    போலீஸ் பாதுகாப்பு

    போலீஸ் பாதுகாப்பு

    ரசிகர்களைக் கட்டுப்படுத்தவும், படக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்கவும் கர்நாடக அரசு 100 போலீசாரை நியமித்துள்ளது. இன்று காலை ஆரம்பித்த படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்றார். அவருடன் சோனாக்ஷி, அனுஷ்காவும் பங்கேற்றனர்.

    English summary
    The final schedule of Rajinikanth's Lingaa shooting is starting today at Jog falls, Shomoga.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X