»   »  ரஜினியின் நெருப்புடா டீசர்.... அதிர வைக்கும் வெற்றி!

ரஜினியின் நெருப்புடா டீசர்.... அதிர வைக்கும் வெற்றி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலியின் நெருப்புடா பாடல் டீசர் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்த டீசர் வெளியான 12 மணி நேரத்துக்குள் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை யுட்யூபில் பெற்றது. இப்போது 32 மணி நேரத்துக்குள் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சாதனைப் புரிந்துள்ளது.


முதல் டீசர்

ஏற்கெனவே கபாலியின் முதல் டீசர் இதுவரை 23 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது உலகளாவிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.


வரவேற்பு

வரவேற்பு

பொதுவாக இரண்டாவது டீசருக்கு முதல் டீசர் அளவுக்கு வரவேற்பு இருக்காது. ஆனால் ரஜினி ரசிகர்களோ, இந்த இரண்டாவது டீசரை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடித் தீர்த்தனர்.


பெரிய வெற்றி

பெரிய வெற்றி

நெருப்புடா பாடல் டீசர் இப்போது திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது. இதுவரை எந்தப் படத்தின் டீசர்களும் இந்தியாவில் இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றதில்லை என்று கொண்டாடுகின்றனர் திரையுலகில் உள்ளவர்களே.


பாடல் வீடியோக்கள்

கபாலி பாடல் வரிகளுடன் வெளியான வீடியோக்களுக்கும் பிரமாதமான வரவேற்பு. இதே நெருப்புடா பாடல் வீடியோவை இதுவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். மற்ற பாடல்களுக்கும் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.


வருமானம்

வருமானம்

இந்த வீடியோக்கள் மூலம் நல்ல வருமானமும் தயாரிப்பாளர் மற்றும் இசை வெளியீட்டு நிறுவனங்களுக்கு கிடைத்து வருகிறது.


English summary
Rajinikanth's Kabali movie second teaser is become a smash hit now.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil