»   »  கபாலி புரட்சிகரமான படம்.. "டிக்ளேர்" செய்தார் ரஜினி!

கபாலி புரட்சிகரமான படம்.. "டிக்ளேர்" செய்தார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான திரைப்படம் என்று கபாலி திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். கபாலி ஒரு வழக்கமான தனது கமர்சியல் படம் இல்லை என்பதை ரஜினி குறிப்பிட்டுள்ளதாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது.

ஒரு மாத ஓய்வு மாதத்திற்கு பிறகு, அமெரிக்காவிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை திரும்பியிருந்தார் ரஜினிகாந்த்.


இந்நிலையில் கபாலி திரைப்பட வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.


புரட்சி, உணர்ச்சி

புரட்சி, உணர்ச்சி

இந்த அறிக்கையின் ஆரம்பத்தில் நாலாவது வரி இப்படி தொடங்குகிறது: "நண்பர் தாணு அவர்களின் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான, வித்தியாசமான மலேசியாவிலும், இந்தியாவிலும் எடுக்கப்பட்ட 'கபாலி' படத்தில்.." இவ்வாறு கடிதம் நீள்கிறது.
விமர்சனம்

விமர்சனம்

கபாலி திரைப்படம் வழக்கமான ரஜினிக்குரிய கமர்சியல் விஷயங்கள் அதிகம் இல்லாமல் வந்துவிட்டதாகவும், ரசிகர்கள் ஏமாந்துவிட்டதாகவும் சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.


வித்தியாசமான படம்

வித்தியாசமான படம்

இந்நிலையில், ரஜினி இது ஒரு புரட்சிகர, உணர்ச்சிகர, வித்தியமான திரைப்படம் என்று படத்திற்கு சான்று வழங்கியுள்ளார். இதன்மூலம், கபாலி திரைப்படம், தனது வழக்கமான ஹீரோயிச திரைப்படம் இல்லை என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார் ரஜினி.


புரட்சிகர படம்

புரட்சிகர படம்

மேலும், இது பொருளாதார ரீதியிலான ஆண்டான், அடிமை பிரச்சினையை பேசும் புரட்சிகர படம் என்பதையும் ரஜினியே வெளிப்படுத்தியுள்ளார். தனது நடிப்பு திறமையை மீண்டும் வெளிக்கொண்டுவர உதவிய உணர்ச்சிகரமான திரைப்படம் என்றும் இதற்கு சான்று வழங்கியுள்ளார் ரஜினி.


ரசிகர்கள் மாறுவார்கள்

ரசிகர்கள் மாறுவார்கள்

தொலைக்காட்சி சேனல் பேட்டியொன்றில், படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில் கூட, சென்னைக்கு ரஜினி வந்து இறங்கியதும், தனக்கு போன் செய்ததாகவும், நம்ம ரசிகர்கள் முதலில் அப்படித்தான் (கமர்சியல் இல்லாத படம் என்பதால்) பேசுவார்கள். பிறகு படம் பிடித்துவிடும் பாருங்கள் என கூறியதாக தெரிவித்தார்.


English summary
Rajini says Kabali is a revolutionary movie and thank the fans for the film's success.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil