»   »  அன்னை இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி: காரணம்...!

அன்னை இல்லத்திற்கு திடீர் விசிட் அடித்த ரஜினி: காரணம்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 60வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் பிரபுவுக்கு ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இளைய திலகம் பிரபு இன்று தனது 60வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் அன்னை இல்லத்தில் கொண்டாடினார். இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று திடீர் என்று அன்னை இல்லத்திற்கு சென்றார்.

Rajini visits Annai Illam

60 வயதை தொட்ட உடன் பிறவா சகோதரர் பிரபுவுக்கு பரிசளித்து நேரில் வாழ்த்தினார். அப்போது பிரபவுடன் அவரது மனைவி, மகன், மகள், மருமகள் உள்ளிட்டோர் இருந்தனர்.

ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிரபவுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ரஜினியும், பிரபுவும் சேர்ந்து தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், சந்திரமுகி, குசேலன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளனர்.

சிவாஜி கணேசனுடன் சேர்ந்து படங்களில் நடித்துள்ள ரஜினி அவரின் மகனான பிரபுவை தனது சகோதரராகவே பார்க்கிறார்.

English summary
Super star Rajinikanth visited Annai Illam to wish actor Prabhu who turns 60 on december 25th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil