Rajini - Kamal: கூலி கலெக்‌ஷனை எகிற வைக்க பக்கா பிளான்.. ரஜினி - கமல் பட அறிவிப்பு இன்னைக்கே வருதாம்!

சென்னை: நினைத்தாலே இனிக்கும், அலாவுதினும் அற்புத விளக்கும் உள்ளிட்ட படங்கள் 1979ம் ஆண்டு வெளியானது. அதன் பின்னர், ரஜினிகாந்த் - கமல்ஹாசன் திரையுலகில் போட்டியாளர்களாகவும் சொந்த வாழ்க்கையில் நல்ல நண்பர்களாகவுமே இருந்து வருகின்றனர்.

இருவரையும் மீண்டும் சேர்த்து வைத்து யாராவது படமெடுப்பார்களா? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், மல்டி ஸ்டாரர்களை வைத்து தொடர்ந்து படமெடுத்து வரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படமாகவே இந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்ட முடிவு செய்துவிட்டார்.

Rajinikanth and Kamal Haasan big buzz official announcement will arrive today
Photo Credit:

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே அமீர்கான் கேமியோ பற்றி லோகேஷ் சொல்வதற்கு முன் உலக நாயகன் கேமியோவா என பறக்க ஆரம்பித்துவிட்டேன் என்று பேசிய நிலையில், இருவரும் பரஸ்பரம் முடிவு செய்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் கோடம்பாக்கத்தை அதிர வைத்துள்ளது.

46 வருடங்களுக்குப் பிறகு மீண்டும்: கமல்ஹாசன் சூப்பர் ஸ்டாராக இருக்கும் போது அவருக்கு வில்லனாக நடிக்க ஆரம்பித்த ரஜினிகாந்த் பல படங்களில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார். அலாவுதினும் அற்புத விளக்கும் படத்தில் கூட கமலுக்கு வில்லனாகவே ரஜினி நடித்திருந்தார். தில்லு முல்லு படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க கேமியோவாக கமல் நடித்திருப்பார். அந்த காலத்திலேயே கேமியோ ரோலை எல்லாம் இவர்கள் செய்து அசத்தி விட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 46 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இருவரும் இணைந்து நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது என திரை வட்டாரங்கள் கூறி வருகின்றன.

இன்று மாலை அறிவிப்பு: ஜெயிலர் 2 படம் வெளியாகும் வரை இந்த படத்தின் அறிவிப்பு வெளியாகாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றே சோஷியல் மீடியாவில் இந்த விஷயம் லீக் ஆகிவிட்டது. இந்நிலையில், இன்று மாலையே அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தயாரிப்பாளர் இன்பநிதி?: குருவி படத்தை தயாரித்து உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளராக திரை துறையில் அறிமுகமானார். அதன் பின்னர், ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து இன்று துணை முதல்வராகவும் உயர்ந்துள்ளார். அதே வழியில் தனது மகனையும் வழிநடத்திச் செல்ல உதயநிதி ஸ்டாலின் போட்ட மாஸ்டர் பிளான் தான் இது என்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் பொறுப்பை இன்பநிதி ஏற்கப் போவதாகவும் பேச்சுக்கள் பயங்கரமாக புகைந்து வருகின்றன.

கூலி வசூலை அதிகரிக்க பிளான்: லோகேஷ் கனகராஜை சோஷியல் மீடியா முழுவதும் ஏகப்பட்ட நெட்டிசன்கள், விமர்சகர்கள் அடி வெளுக்கு படத்தின் வசூல் அதனால் குறைந்து விடக் கூடாது என்பதற்காக சட்டென இந்த அறிவிப்பை வெளியிட்டு கூலி படத்தின் 2வது வார கலெக்‌ஷனை அதிகரிக்கவும் பலே ஐடியா போட்டுவிட்டார்களா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. எது எப்படியாக இருந்தாலும் இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் ரஜினிகாந்த் - கமல் ரசிகர்கள் ஆன்லைனில் சண்டை போடாமல் ஒன்று சேர்ந்துவிடுவார்கள். அப்படியே அந்த படத்தில் கேமியோவாக விஜய்யையும் லோகேஷ் நடிக்க வைத்து விட்டால் கோலிவுட் ரசிகர்கள் சண்டைக்கு பெரிய பூசணிக்காயை சுற்றிப் போட்டு விடலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X