Vijay X Rajini X Kamal: நெஞ்சே வெடிக்குது.. பதறிய ரஜினி, கமல்.. விஜய் பிரச்சாரத்தால் அப்பாவிகள் பலி
கரூர்: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் இன்று அதாவது செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அங்கு அவரைக் காண் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தார்கள். இப்படி இருக்கும்போது இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சுமார் 38 போர் உயிரழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளார்கள். இப்படி இருக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அப்பாவி மக்கள் உயிரிழந்தது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார். அதில், " கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்" என்று பகிர்ந்துள்ளார்.

இந்த துக்க நிகழ்வுக்கு காரணமே விஜய் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் காவல்துறை அறிவுருத்தலை பின் பற்றாததுதான் காரணம் என்று பலரும் பேசி வருகிறார்கள்.
அதேபோல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், “நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று வேதனை தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் மற்றும் ஜி.வி. பிரகாஷ்குமார்: நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில், “ கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 31 பேரின் குடும்பங்களுக்கு யார் எப்படி ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. இன்னும் சிகிச்சையில் இருக்கும் 58 பேரும் விரைந்து குணமடைய அனைவரும் வேண்டிக் கொள்வோம்." இவ்வாறு பதிவிட்டு தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். அதேபோல் இசையமைப்பாளர் மற்றும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “ கோர காட்சிகள் நம்மை கதிகலங்க வைக்கிறது. யாருக்கு ஆறுதல் சொல்வது எப்படி தேற்றுவது என தெரியாமல் தவிக்கிறேன். கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா இறைவனடி இளைப்பாறட்டும். நண்பர்களுக்கும் , உறவினர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று பதிவிட்டு வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











