»   »  "ரோல்லிங்... சா...ர்" சொன்ன சூப்பர்ஸ்டார்... 'அருவி' டீமை அழைத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ரஜினி!

"ரோல்லிங்... சா...ர்" சொன்ன சூப்பர்ஸ்டார்... 'அருவி' டீமை அழைத்து சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கடந்த வாரம் வெளியாகி பெரும்பாலான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற படம் 'அருவி'. இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த், இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமனை போனில் அழைத்து பாராட்டி இருந்தார்.

இந்நிலையில் இப்போது இயக்குநர் அருண் மற்றும் ஹீரோயின் அதிதியை நேரில் அழைத்து பாராட்டியதோடு இருவருக்கும் தங்க செயினை பரிசாக அளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அருவி தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவும் உடன் இருந்தார். அவர்களிடம் 'அருவி' படம் குறித்து கேட்டறிந்துகொண்ட ரஜினி, மகிழ்ச்சியாகப் பாராட்டி இருக்கிறார்.

இயக்குநரை பாராட்டிய ரஜினி

இயக்குநரை பாராட்டிய ரஜினி

"அருவி ரொம்ப புத்திசாலிதனமான, அருமையான படம். படத்தை பார்த்து அழுதேன், நிறைய சிரித்தேன், தனியாக படத்தை பார்க்கும்போது தியேட்டரில் உட்கார்ந்து பார்த்த உணர்வு கிடைத்தது. அருவி படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும்.

கேட்டுத் தெரிந்துகொண்ட ரஜினி

கேட்டுத் தெரிந்துகொண்ட ரஜினி

இப்படியொரு படத்தை கொடுத்தற்காக எங்களை போன்ற மக்கள் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று இயக்குநரை மனதார பாராட்டினார். இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்று கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

அருவி பட வசனம் பேசிய ரஜினி

அருவி பட வசனம் பேசிய ரஜினி

அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வசனமான "ரோல்லிங் சா...ர்" என்ற வசனத்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார். இந்தச் சந்திப்பால் இயக்குநர் அருண் பிரபு நெகிழ்ந்திருக்கிறார்.

எவ்ளோ வெயிட் குறைச்சீங்க

எவ்ளோ வெயிட் குறைச்சீங்க

கதாநாயகி அதிதியிடம், "உங்கள் நடிப்பு சூப்பர். உங்களை போன்றவர்கள் கண்டிப்பாக நீண்டநாள் சினிமாவில் இருக்க வேண்டும்." என்று வாழ்த்தினார். "படத்தின் கடைசி காட்சிகளுக்காக எவ்வளவு வெயிட் குறைச்சீங்க" எனக் கேட்டிருக்கிறார்.

எல்லா படமும் பார்த்துட்டேன்

எல்லா படமும் பார்த்துட்டேன்

அதேபோல் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடமும், அவரது படங்கள் குறித்து விசாரித்திருக்கிறார். "நீங்கள் தயாரித்த எல்லா படங்களையும் நான் பார்த்துவிட்டேன் எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள்" என்று கூறியுள்ளார்.

பப்ளிசிட்டி பண்ணுங்க

பப்ளிசிட்டி பண்ணுங்க

இறுதியில், "உங்களை போன்ற ஆட்கள் கண்டிப்பாக ரொம்ப நாள் சினிமாவில் இருக்கணும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்க" என்று கூறி வாழ்த்தியுள்ளார் ரஜினிகாந்த். அவரது சந்திப்பு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

English summary
Last week's release, 'Aruvi' film received a lot of praise from fans. Rajinikanth was praised director ArunPrabhu purushothaman for directed the movie. Now, aruvi team ha invited and blessed by Rajinikanth. Rajinikanth gifted gold chains to director and actress aditi balan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X