Coolie Box Office: 50 வருஷம் ஓடுற குதிரைக்கு அனுபவம் ஜாஸ்தி குழந்தை.. கூலி நான்கு நாள் வசூல் விபரம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியான படம் முதல் நான்கு நாட்களில் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என்ற தகவலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கூலி படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் ரிலீஸ் ஆன படத்திற்கு விமர்சன ரீதியாக கலவையான கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனாலும் படம் வசூலில் கொடு கட்டி பறந்து வருகிறது. படம் முதல் நாளிலேயே ரூபாய் 151 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இது தமிழ் சினிமா வரலாற்றில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படமாக மாறியது.

Rajinikanth Coolie Movie Day 4 Official Box Office Collection 404 cr World Wide

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும், காலகட்டத்தில் கூலி படம் வெளியானது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 1975 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். இப்படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிறது. கடந்த 50 ஆண்டுகளில் 171 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இவரது 171வது படம் கூலி.

கூலி படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் காத்துக் கொண்டு இருந்தார்கள். படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில் ரூபாய் 404 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த தகவல் தற்போது மொத்த திரை உலகையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மேலும் பலர், 50 வருஷம் ஓடும் குதிரைக்கு அனுபவம் ஜாஸ்தி என்பதை, கூலி படத்தின் வசூல் மீண்டும் நிரூபித்து விட்டது. இது மட்டும் இல்லாமல் ஐந்து தலைமுறைகளை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு எப்போதும் மவுசு குறையாது என்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். கூலி படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 404 கோடிகளை வசூல் செய்த தகவலை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பரப்பி வருகிறார்கள்.

Rajinikanth Coolie Movie Day 4 Official Box Office Collection 404 cr World Wide

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X