»   »  தரமணி தயாரிப்பாளருக்கு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி!

தரமணி தயாரிப்பாளருக்கு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தரமணி படத்தையும் அதன் தயாரிப்பாளரையும் போனில் பாராட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

மக்கள் மத்தியில் ஆதரவு பெற்ற தரமான படங்களை தவறாமல் பார்த்து அந்த படம் சம்பந்தப்பட்டவர்களை நேரில் அழைத்தோ போனிலோ மனதார பாராட்டும் வழக்கம் கொண்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth praises Taramani

கடந்த வெள்ளியன்று வெளியாகி, பெரும் பாராட்டுகளையும் நல்ல வசூலையும் பெற்றுள்ள தரமணி படத்தை நேற்று ரஜினிகாந்த் பார்த்தார். அடுத்த நிமிடமே தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ் குமாரை போனில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஜேஎஸ்கே கூறுகையில், "இது போன்ற ஒரு வாழும் சாதனையாளரிடமிருந்து அழைப்பு வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. மகிழ்ச்சியான ஆச்சிரியத்தில் உறைந்தே போனேன். 'தரமணி' ஒரு துணிச்சலான படம் (Bold film) என்று கூறினார் ரஜினி சார். படத்தின் எல்லா அம்சங்களை பற்றியும் விவரமாகப் பாராட்டினார்.

படத்தின் வணிக வெற்றியைப் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். படத்தின் பெரிய வெற்றியை அவரிடம் கூறியபொழுது கேட்டு மகிழ்ந்தார். 'தரமணி' மூலம் நடிப்பில் காலடி எடுத்துவைத்திருக்கும் எனது நடிப்பையும் எனது கதாபாத்திரத்தையும் பற்றியும் விவரமாகப் பேசிப் பாராட்டினார். இது போன்ற ஜாம்பவான்களின் பாராட்டுகள் மேலும் தரமான படங்களை தயாரிக்க எனக்கும் எனது நிறுவனத்துக்கும் பெரும் ஊக்கமாக உள்ளது,'' என்றார்.

English summary
Actor Rajinikanth has praised Taramani movie and its producer JSK Sathish Kumar
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil