»   »  2017 பொங்கலுக்கு ‘பொங்க’ வருகிறது ரஜினியின் 2.0!

2017 பொங்கலுக்கு ‘பொங்க’ வருகிறது ரஜினியின் 2.0!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் '2.0' படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2010ம் ஆண்டு ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய படம் எந்திரன். இப்படத்தில் ரஜினியின் ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது.


இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 2.0 என்ற பெயரில் ஷங்கர் இயக்கி வருகிறார்.


எமி ஜாக்சன்...

எமி ஜாக்சன்...

இப்படத்தில் ரஜினியின் நாயகியாக எமி ஜாக்சனும், வில்லனாக பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாரும் நடிக்கின்றனர்.


லைக்கா...

லைக்கா...

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.


கபாலி...

கபாலி...

ரஜினி தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்திலும் நடித்து வருகிறார். இதனால் இரண்டு படங்களிலும் மாற்றி மாற்றி அவர் நடித்து வருகிறார்.


ரோபோ...

ரோபோ...

இது தவிர முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததும், ரோபோக்களை வைத்து படமாக்க இருக்கும் காட்சிகள் எப்படி வரவேண்டும் என்பதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளார் ஷங்கர்.


பொங்கல் ரிலீஸ்...

பொங்கல் ரிலீஸ்...

இந்நிலையில், இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்‌ஷய்குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘இப்படம் ரிலீசாக இன்னும் ஒருவருடம் இருக்கிறது' எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


English summary
Superstar Rajinikanth is all set to treat his fans with back to back releases soon. The star actor is currently working on Ranjith directed 'Kabali' and Shankar's '2.o'. The latest buzz is that Shankar's team is planning to release the film by Pongal 2017.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil