»   »  முகம், உடல் முழுக்க சூப்பர்ஸ்டார் உருவம்... ரஜினி சந்திப்பில் வெறித்தன ரசிகர்!

முகம், உடல் முழுக்க சூப்பர்ஸ்டார் உருவம்... ரஜினி சந்திப்பில் வெறித்தன ரசிகர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினியை சந்திக்க உடல் முழுவதும் ரஜினியின் உருவத்தை பதித்து வந்த ரசிகர்..!!- வீடியோ

சென்னை : ரஜினிகாந்த், தனது ரசிகர்களை கடந்த மூன்று நாட்களாக ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து உரையாற்றி அவர்களோடு புகைப்படம் எடுத்து வருகிறார்.

அதன்படி இன்று, மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்களைச் சந்தித்து வருகிறார். அவர்கள் மத்தியில் பேசி, புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறார் ரஜினி.

ரஜினிகாந்தின் வெறித்தனமான ரசிகர்கள் பலர் அவரைச் சந்தித்து வருகின்றனர். முகத்தில் ரஜினி உருவத்தை வரைந்த ரசிகர் ஒருவரும் ரஜினியை சந்தித்தார்.

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு

ரஜினி ரசிகர்கள் சந்திப்பு

ரஜினிகாந்த் கடந்த மே மாதம் தனது ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இப்போது இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வருகிறார்.

நின்றபடி புகைப்படம்

நின்றபடி புகைப்படம்

ரஜினியை சந்திக்க அழைக்கப்பட்டிருக்கும் ரசிகர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரசிகர்களும் வரிசையாக வந்து ரஜினியோடு இன்று புகைப்படம் எடுத்து வருகிறார்கள்.

சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி

சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி

இன்று மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்து வருகிறார் ரஜினி. 'மதுரை ரசிகர்களுக்கு கிடா விருந்து வைக்கத்தான் ஆசை; ஆனால், ராகவேந்திரா மண்டபத்தில் சைவ உணவுக்கு மட்டுமே அனுமதி' எனப் பேசியுள்ளார்.

முகத்தில் ரஜினி உருவம்

முகத்தில் ரஜினி உருவம்

இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் நெற்றி உள்ளிட்ட இடங்களில் ரஜினி பெயரை பச்சை குத்தியிருக்கும் ரசிகர் ஒருவர் ரஜினியைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவர் முகத்தில் 'காலா' ரஜினி உருவத்தை வரைந்திருந்தார். அவர் ரஜினி படங்கள் ப்ரின்ட் செய்யப்பட்ட சட்டையை அணிந்திருந்தார்.

ரஜினியை சுற்றி வந்த ரசிகர்

ரஜினியை சுற்றி வந்த ரசிகர்

நேற்றைய சந்திப்பில் ரஜினி குணா என்ற ரசிகர் ஒருவர் போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் ரஜினியை சுற்றி சுற்றி வந்து வணங்கினார். 'போட்டோ முக்கியமில்லை.என் கடவுள்தான் முக்கியம்' எனக் கூறி கடவுளைக் கும்பிடுவது போல கையை உயர்த்தி ஆத்மார்த்தமாக வணங்கினார்.

English summary
Rajinikanth meets his fans for the last three days at Raghavendra mandapam. Today, he meets fanss of Madurai, Virudhunagar, Salem and Namakkal district. Today, A Rajini fan meets rajini, who have rajini tattoo on his body. He also painted 'kaala' Rajini face in his face.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X