»   »  கபாலி 2... அப்பா படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா தனுஷ்

கபாலி 2... அப்பா படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் ஐஸ்வர்யா தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி மீண்டும் நடிக்கவுள்ள புதிய படத்தில், ரஜினியின் மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா நடிகையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்தது பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படம். இப்பட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

Rajinikanth's daughter Aishwarya to Act in his film

இப்படத்தை தனுஷ் தனது ஒண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க இருக்கிறார். தற்போது இப்பட வேலைகளில் ரஞ்சித் தீவிரமாக உள்ளார்.

இதற்கிடையே ஷங்கர் இயக்கத்தில் எந்திரனின் இரண்டாம் பாகமான 2.0 படத்தில் தற்போது ரஜினி நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்ததும் அவர் ரஞ்சித் படத்தில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே தமிழில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த '3' படத்தையும், கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை படத்தையும் ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஆனால், இதுவரை அவர் எந்த படத்திலும் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said that Aishwarya the elder daughter of Rajinikanth will be acting in an important role in the Superstar's film with director Pa.Ranjith which will be produced by Dhanush the husband of Aishwarya under his Wunderbar Films banner. The film will go on floors next year after Rajinikanth completes '2.0' directed by Shankar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil