ரஜினியே இப்படி சொல்லி இருக்காரே...அப்போ படம் எப்படி இருக்கும் ?
சென்னை : நடிகர் பார்த்திபன் எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் இரவின் நிழல். பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ள படம். இந்த படம் ஜுலை 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
Recommended Video
எடிட்டரே இல்லாமல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் Non linear Single shot படம் என்ற பெருமையை இந்த படம் பெற்றுள்ளது. இதற்காக ஆசியா மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இரவின் நிழல் படம் இடம்பிடித்துள்ளது.
இரவின் நிழல் படம் சமீபத்தில் பிரான்சில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டு காண்பிக்கப்பட்டது.இந்நிலையில் தியேட்டர்களில் 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது.

96 நிமிடங்கள் Non linear Single shot
இரவின் நிழல் படத்தின் ப்ரீமியர் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இதன் விமர்சனங்கள் நேற்று வெளியாகி செம டிரெண்டாகின. படத்தின் முதல் 30 நிமிடங்கள், இந்த படத்தை எடுத்தார்கள் என்ற மேக்கிங் வீடியோ காட்டப்படுகிறதாம். அதற்கு பிறகு இன்டர்வெல், அதைத் தொடர்ந்து 96 நிமிடங்கள் Non linear Single shot ல் எடுக்கப்பட்ட படம் திரையிடப்படுகிறதாம்.

இது தான் படத்தின் கதை
50 வயதாகும் ஒருவர் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள், அதன் இருண்ட பக்கங்களை திரும்பிப் பார்ப்பது தான் படத்தின் கதை. இதை த்ரில்லிங் கலந்து, சுவாரஸ்யமாக படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக சொல்லி இருக்கின்றார்களாம். இந்த படத்தை பார்த்தவர்கள் பார்த்திபனின் படைப்பு திறமை, படத்தில் நடித்தவர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

ரஜினி என்ன சொல்லிருக்கார்
இந்நிலையில் படம் குறித்து பேசி ரஜினி பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பார்த்திபன், ஒரு வித்தியாசமான முயற்சிகள் செய்ய வேண்டும் என்று எப்போதும் துடிக்கும் ஒரு கலை ரசிகன். Non linear Single shot, உலகத்திலேயே இதுவரை யாரும் எடுத்ததே கிடையாது. 29 நிமிடங்கள் இந்த படத்தை எப்படி எடுத்தார்கள் என காட்டி இருக்காங்களாம். புல்லரிக்குமாம்.இந்த படம் கண்டிப்பாக நல்லா போகும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ரஜினியே இப்படி சொல்லிட்டாரே
பொதுவாக ஒரு படம் ரிலீசான பிறகு அதை பார்த்து விட்டு தான் ரஜினி அது பற்றி கமெண்ட் சொல்லி, பாராட்டி வருகிறார். ஆனால் இரவின் நிழல் படத்திற்கு படத்தின் ரிலீசிற்கு முன்பே படம் பற்றி பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் ரஜினி. ரஜினியே இப்படி சொல்லி இருக்கிறார் என்றால், அப்படி எப்படி இந்த படத்தை சிங்கிள் ஷாட்டில் எடுத்திருப்பார்கள் என பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











