Coolie 7th day Box Office: கூலி 7வது நாள் வசூல்.. ரொம்ப டல் அடிக்குதே.. வீக்கெண்டிலாவது பிக்கப் ஆகுமா?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் 7வது நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. வார நாட்களில் கேஜிஎஃப் 2, பதான், ஜவான், பாகுபலி படங்கள் தொடர்ந்து இந்தியளவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி 1000 கோடி வசூல் சாதனையை படைத்தன.
ஆனால், ரஜினிகாந்த், அமீர்கான், நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், செளபின் சாஹீர், ஸ்ருதிஹாசன் என மல்டி ஸ்டார்கள் நடித்து அனிருத் இசையில் வெளியான கூலி திரைப்படம் முதல் 4 நாட்களில் பெரியளவுக்கு கல்லா கட்டியதை போல வார நாட்களில் பெரிதாக வசூல் செய்ய முடியாமல் திணறி வருகிறது.

கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என தயாரிப்பு நிறுவனம் உயர்நீதிமன்றத்திலும் மனு அளித்துள்ளது. தாங்கள் செய்ய சொன்ன திருத்தங்களை ஏற்க மறுத்த நிலையில் தான் ஏ சான்றிதழ் வழங்கினோம் என தணிக்கை குழு பதில் அளித்துள்ளது.
போராடும் சன் பிக்சர்ஸ்: வயலென்ஸ் தான் தன்னுடைய டிரேட் மார்க் என நினைத்த லோகேஷ் கனகராஜ் கூலி படத்துக்கு ஏ சான்றிதழ் வந்தாலும் பரவாயில்லை என நினைத்து சென்சார் சொன்ன நிபந்தனைகளை ஏற்கவில்லை. கூலி படத்தின் வசூல் திடீரென குறையத் தொடங்கிய நிலையில், பெரிய வசூலை எதிர்பார்த்து பல நூறு கோடி முதலீடு போட்ட சன் பிக்சர்ஸ் தற்போது யு/ஏ சான்றிதழ் வாங்க போராடி வருகிறது. 2வது வாரத்தில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் படம் பார்க்க வருவதற்கான வேலைகளையும் சன் பிக்சர்ஸ் செய்து வருகிறது.
கூலி 7வது நாள் வசூல்: இந்தியளவில் கூலி தமிழில் மட்டுமே நல்ல வசூலை அள்ளி வருகிறது. தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியானாலும், அந்த மொழியில் பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தாலும் கூலி படம் வார நாட்களில் மற்ற இடங்களில் ரொம்பவே மோசமான வசூலை மட்டுமே அள்ளி வருகிறது. நேற்று நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக வெறும் 6.5 கோடி மட்டுமே வசூல் செய்து இதுவரை இந்தியாவில் கூலி திரைப்படம் 222.5 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக Sacnilk வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது.
உலகளவில் எவ்வளவு வசூல்: லியோ திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருந்த நிலையில், கூலி திரைப்படம் உலகளவில் இதுவரை 464.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவை விட ஓவர்சீஸில் கூலி வசூல் அதிகளவில் வந்திருப்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டார்டம்மை காட்டுகிறது என்கின்றனர்.
ஃபேக் பாக்ஸ் ஆபீஸ்: லியோ வசூலே போலி என்றும் லியோ வசூலை பார்த்து கூலி வசூல் போஸ்டர்களை சன் பிக்சர்ஸ் உருவாக்கி ரெக்கார்ட் மேக்கர், ரெக்கார்ட் பிரேக்கர் என போட்டு வருவதாகவும், இந்த ஆண்டு கேம் சேஞ்சர் படம் முதல் நாளே 186 கோடி வசூல் என போலியாக அடித்து போஸ்டர் வெளியிட்டு பின்னர் தயாரிப்பாளரே புலம்பிய நிலை தான் உண்மையாக இருக்கும் என்றும் ஏகப்பட்ட ஃபேக் பாக்ஸ் ஆபீஸ் பஞ்சாயத்துக்களும் ஓடிக்கொண்டிருக்கின்றன. கூலி படத்தின் ஒரு வார வசூல் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் இன்று வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications











