»   »  பொங்கல் ரேஸில் முந்திய ரஜினிமுருகன்... மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார் சிவகார்த்தி!

பொங்கல் ரேஸில் முந்திய ரஜினிமுருகன்... மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பினார் சிவகார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தப் பொங்கலுக்கு வெளியான 4 படங்களில் சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது.

இதன் மூலம் தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை மீண்டும் சிவகார்த்திகேயன் பிடித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பலமுறை தள்ளிப்போனாலும் கூட வெளியான முதல் வாரத்தில் சுமார் 20 கோடிகள் வரை வசூல் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது ரஜினிமுருகன்.


ரஜினிமுருகன்

ரஜினிமுருகன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரக்கனி, ராஜ்கிரண் ஆகியோரின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ரஜினிமுருகன் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது.பொங்கல் பண்டிகையையொட்டி 4 படங்கள் வெளியான போதிலும் காமெடியால் வசூல் ராஜாவாக மாறியிருக்கிறது ரஜினிமுருகன்.


காக்கிச்சட்டை

காக்கிச்சட்டை

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான காக்கிச்சட்டை மற்றும் மான் கராத்தே ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் சிவாவின் மார்க்கெட் சற்று டல்லடித்து காணப்பட்டது. ஆனால் இந்த சறுக்கலை சரிசெய்து மீண்டும் அவரை வெற்றிப்பாதைக்கு திருப்பியிருக்கிறது ரஜினிமுருகன்.
எதிர்நீச்சல்

எதிர்நீச்சல்

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற வெற்றித் திரைப்படங்கள் வரிசையில் லேட்டஸ்டாக ரஜினிமுருகனும் இணைந்திருக்கிறது.


தடைகளைத் தாண்டி

தடைகளைத் தாண்டி

கடந்த விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக வேண்டிய இப்படம் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக தொடர்ந்து தள்ளிப் போனது. பலமுறை தள்ளிப் போனாலும் கூட வருத்தப்படாத வாலிபர் சங்கம் காரணமாக இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு துளியும் குறையவில்லை.


மற்ற படங்கள்

மற்ற படங்கள்

குடும்பத்துடன் பார்க்கும் வகையில் உள்ளதால் மற்ற படங்களுடன் ஒப்பிடும்போது வசூலில் புதிய சாதனை செய்து வருகிறது இப்படம். வேறு பெரிய படங்கள் எதுவும் இப்போதைக்கு வெளியாகும் சூழ்நிலை இல்லை என்பதால் இன்னும் 1 வாரத்திற்கு இப்படத்திற்கான வசூல் குறைய வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர்.


3 வது முறையாக

3 வது முறையாக

இந்தப் படம் கொடுத்த தெம்பு காரணமாக மீண்டும் ஒரு படத்தில் பொன்ராம் - சிவகார்த்திகேயன் கூட்டணி இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைப் போன்றே ரஜினிமுருகனும் சிவகார்த்திகேயன் அந்தஸ்தை பன்மடங்கு உயர்த்திப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


English summary
Sivakarthikeyan- Keerthy Suresh Starring Rajinimurugan, It has collected Above 20 Crores for First Weekend in Worldwide Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil