அபிஷேக்கை கமலிடம் போட்டு கொடுக்கும் ராஜு... கலகலப்பான அசத்தல் ப்ரோமோ

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. வெற்றிகரமாக முதல் வாரம் நிறைவு பெற்றுள்ளது. இதில் போட்டியாளர்களாக பாடகர்கள், நடிகர்கள், மாடல், சோஷியல் மீடியா பிரபலங்கள் என பல துறைகளைச் சேர்ந்த 18 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

Recommended Video

Bigg Boss Season 5 Promo | போட்டுக்க Dress கூட இல்ல, கலங்கும் Housemates

நிகழ்ச்சியின் ஆறாம் நாளான நேற்று கமல் வரும் வார இறுதி எபிசோட் ஒளிபரப்பானது. இதில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் பற்றி கமல் என்ன சொல்வார், எளிமினேஷன் இருக்குமா என ரசிகர்கள் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

போட்டியாளர்களை கலாய்த்த கமல்

போட்டியாளர்களை கலாய்த்த கமல்

ஆனால் கமல், போட்டியாளர்கள் சொன்ன அவர்களின் கதை பற்றி பேசி, அது பற்றிய தனது கருத்தையும் அதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய சோஷியல் மெசேஜ் பற்றியும் விளக்கிக் கூறினார். பிறகு போட்டியாளர்களின் முதல் வார செயல்பாடுகள் பற்றி தனித்தனியே கலாய்த்தார். இது ரசிக்கும் படி அமைந்தது.

பிரியங்கா என் அக்கா

பிரியங்கா என் அக்கா

இந்நிலையில் ஏழாம் நாளான இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இதில் முதல் ப்ரோமோவை அபிஷேக் கண்கலங்கிய படி, இந்த வீட்டிலேயே பிரியங்காவை தான் பிடிக்கும். அவரை பார்க்கும் போது எங்க அக்காவை பார்ப்பது போல் உணர்வு வருகிறது என பேசுகிறார். பிரியங்காவும் ஓடிச் சென்று அவரை சமாதானப்படுத்துகிறார்.

கண் கலங்கிய தாமரை

கண் கலங்கிய தாமரை

இரண்டாவது ப்ரோமோவில் தாமரை செல்வி கண் கலங்கிய படி, சின்ன வயதில் எப்படி ஜாலியாக இருக்க வேண்டும் என நினைத்து ஆசைப்பட்டேனோ அப்படி இந்த வீட்டில் இருக்கிறேன். மனது கஷ்டமாக இருந்தாலும் இமான் அண்ணாச்சி கூப்பிட்டு பேசுகிறார் என சக போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்தை சொல்லி, லைக் மற்றும் டிஸ்லைக் கொடுக்கிறார்.

போட்டுக் கொடுத்த ராஜு

போட்டுக் கொடுத்த ராஜு

அதைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது ப்ரோமோவில், அபிஷேக்கும் எனது டீமில் தான் சார் இருக்கான். ஆனால் அவனை ஒருநாள் கூட நான் பார்க்கவில்லை. பாத்ரூம் க்ளீன் பண்ண சொன்னா எல்லோரை பற்றியும் ரெவ்யூ செய்து கொண்டிருக்கிறான். அவன் போவதற்கு முன் மட்டும் ரொம்ப அக்கறையாக பாத்ரூம் க்ளீன் செய்கிறான் என கமலிடம் போட்டுக் கொடுக்கிறார் ராஜு ஜெயமோகன். அதற்கு சிறப்பாக கொளுத்தி போடுறான் என கூறுகிறார் அபிஷேக்.

லைக்குகளை அள்ளிய ப்ரோமோ

லைக்குகளை அள்ளிய ப்ரோமோ

மிக கலகலப்பான இந்த ப்ரோமோவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். இந்த ப்ரோமோ வெளியிடப்பட்ட 30 நிமிடங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து, லைக் செய்துள்ளனர். சிலர், நமீதா போனதற்கு பதில் அபிஷேக் வெளியே போய் இருந்தா நிறைய பேர் சந்தோஷப் பட்டிருப்பார்கள் என கமெண்ட் செய்துள்ளனர். ஒரு வாரத்திலேயே அக்ஷரா, பிரியங்கா, அண்ணாச்சிக்கு நிறைய ரசிகர்கள் பெருகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X