Don't Miss!
- News
1.32 கோடி இளைஞர்கள்.. தமிழ்நாட்டில் வேலையில்லாமல் தவிக்கிறார்கள்.. அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பாவனியிடம் எல்லை மீறி பேசிய ராஜு பாய்.. என்ன இருந்தாலும் அது தப்புதான் என கண்டிக்கும் ரசிகர்கள்!
சென்னை: நீங்க உடை மாற்றும் போது நான் வந்து எடுத்தா நல்லா இருக்குமா? என பாவனியிடம் ராஜு பாய் பேசியது சரியல்ல என்று பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
சுருதி காயினை எடுத்த உடனே தாமரை செல்வி உடை மாற்றும் அறையில் ஏன் எடுக்கிற என கேட்கவில்லை.
சுருதி வெளியே சென்று ரொம்ப நேரம் ஆன பிறகு தான் தனது காயின் காணவில்லை என தெரிந்த பிறகு தான் தாமரை வெளியே வந்து சுருதியிடம் கேட்க ஆரம்பித்தார்.
செய்றதெல்லாம் செஞ்சுட்டு.. தாமரை குறித்தே தவறாக பேசிய பாவனி - ஸ்ருதி.. இதுல கண்ணீர் வேற!

டிராமா குயின்
தனது காயினை பறிகொடுத்து விட்டோமே என்கிற கோபத்தில் தான் தாமரை செல்வி சுருதி மற்றும் பாவனியிடம் சண்டை போட ஆரம்பித்தார். அழுது புலம்பினால் அனைவரும் நம் பக்கம் வந்து நிற்பார்கள் என்பது டிராமா குயின் தாமரை செல்விக்கு நன்றாகவே தெரிந்து தான் அப்படியொரு ஆட்டத்தை ஆடினார். அவரது அப்பாவித்தனம் தான் அவருடைய கேடயம்.

தப்பு தான்
மறுபக்கம் சுருதி மற்றும் பாவனி பக்காவாக திட்டமிட்டு தாமரை உடை மாற்றும் போது உள்ளே சென்று அந்த காயினை அபேஸ் செய்தனர். விளையாட்டாக சுருதி செய்ய நினைத்தது வினையாக முடிந்து விட்டது. ஆனால், பாவனி தனக்கும் இந்த திருட்டுக்கும் சம்மந்தமே இல்லை என போட்ட உருட்டு தான் பயங்கரமான உருட்டு.

என்னோட காயின்
தாமரை செல்விக்காக அந்த காயினை எடுத்து கொடுத்த பிறகு அந்த காயினையே நாங்க தான் எடுத்துக் கொடுத்தோம் என ராஜு பாய் பாவனியிடம் நேரடியாக சண்டையிடுவது போல பேச ஆரம்பித்ததே தவறு என நெட்டிசன்கள் ராஜு பாயின் தவறை சுட்டிக் காட்ட ஆரம்பித்துள்ளனர்.

பெண்ணிடம் இப்படியா பேசுவது
எச்சில் துப்புவது கூடத்தான் ரூல் புக்கில் இல்லை. அதற்காக வீட்டில் எச்சில் துப்ப முடியுமா என பாவனியிடம் எரிச்சலாக பேசும் ராஜு பாய்க்கு ஒரு பெண்ணிடம், "நீ டிரெஸ் பண்ணும் போது நான் வந்து எடுக்கவா: என எப்படி பேசினார் என்றும் பாவனி அதற்கு ஒரு பஞ்சாயத்து வைக்காமல் ராஜு நீங்க பேசுறது சரியில்லை என வாதாடியது சூப்பர் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் ராஜு பண்ணது ரொம்பவே தப்பு என திட்டி வருகின்றனர்.

என்ன ஆச்சுன்னே கேட்கல
ராஜு ஜெயமோகன் உள்ளே வந்து என்ன ஆச்சு என்றே சுருதி மற்றும் பாவனியிடம் கேட்கவில்லை. தாமரை செல்வியிடமும் தெளிவாக கேட்டுக் கொண்டு வராமல் காயின் எடுத்தது பாவனி என்பது போல அவரிடம் எகிறியது ராஜு பாயின் தவறான இன்டென்ஷனை காட்டுகிறது என்றும் ராஜு மற்றும் பாவனி இடையே பெரும் சண்டை நடக்கப் போகிறது என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரியங்கா பேசியிருக்கணும்
பெண்கள் குறித்த பஞ்சாயத்தில் ராஜு பாய் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காமல் பிரியங்காவை இந்த விவகாரத்தில் பேச வைத்திருந்தால் பாவனி எதுக்கு தேவையில்லாமல் டிரெஸ்சிங் ரூமில் துண்டை பிடித்துக் கொண்டு இருந்த என கடைசியில் கேட்டு பங்கம் பண்ணது போல ஆரம்பத்திலேயே பஞ்சாயத்தை முடித்திருப்பார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.