For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் இப்படிதான் ஏவி கட் பண்ணிட்டு இருந்தேன்.. ரசிகர்களை நெகிழ வைத்த ராஜு!

  |

  சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களை சனிக்கிழமை எபிசோடிலேயே மேடை ஏற்றி பட்டாசு வெடிக்க வைத்து ஒவ்வொருவரும் வெற்றியாளர்கள் தான் என சிறப்பித்துள்ளது ஒவ்வொரு போட்டியாளர்களின் ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தி உள்ளது.

  ராஜு ஜெயமோகன் அந்த மேடையில் ஏறி நிற்கும் காட்சிகள் ஒளிபரப்பாகும் முன்பாகவே அவர் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்பது கசிந்து விட்டது.

  மேலும், ராஜு இதுபோன்ற ஏவிக்களை கட் செய்யும் பணியை செய்து கொண்டிருந்தேன் என சொன்னதை கேட்ட ரசிகர்கள் நெகிழ்ந்து போய் விட்டனர்.

  டைட்டில் வின்னர் ராஜு

  டைட்டில் வின்னர் ராஜு

  பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னர் ராஜு தான் என தகவல்கள் கசிந்துள்ளன. நாளை அதிகாரப்பூர்வமாக ஷோ போடும் போது தான் அந்த டிராபி வாங்கும் தருணத்தை ரசிகர்கள் கண்டுகளிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். கடைசி வரை ராஜு ரசிகர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும் விதமாக சில சித்து வேலைகள் பிக் பாஸ் வீட்டில் நடந்ததாலும் அதிக ஓட்டுக்களை குவித்து நம்பிக்கையுடன் காத்திருந்ததற்கு கடைசியாக பலன் கிடைத்து விட்டது.

  மிக்சர் தின்னியா

  மிக்சர் தின்னியா

  ராஜு மிக்சர் தின்னுக் கொண்டே டைட்டிலை வின் பண்ணி விட்டார் என ஏகப்பட்ட ராஜு ஹேட்டர்கள் கமெண்ட் அடித்து விமர்சனம் செய்து வருகின்றனர். அவர்களுக்காகவே போடப்பட்டது போல ராஜுவின் பயண வீடியோ செம சூப்பராக இருந்தது. அத்தனை வேஷங்கள், அத்தனை கதாபாத்திரங்கள், காமெடி, பொறுமை, கோபத்தை அடக்கும் திறமை, நட்பு என அனைத்திலும் அசத்தி உள்ளார் ராஜு. அதன் காரணமாகவே பெரும்பாலான மக்களுக்கு ராஜுவை பிடித்துப் போய் இருக்கிறது.

  ஏவி கட் பண்ணேன்

  ஏவி கட் பண்ணேன்

  தன்னுடைய ஏவியை பார்த்துப் பூரித்துப் போன ராஜுவின் கண்கள் குளமாகின. சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் விஜய் டிவியில் இதே போல சில நிகழ்ச்சிகளுக்கு கொஞ்ச நாள் முன்னாடி வரை ஏவி கட் பண்ணிட்டு இருக்கும் வேலையை செய்து வந்ததாகவும் இன்னைக்கு எனக்கு ஒருத்தர் ஏவி கட் பண்ணியிருப்பது பார்க்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு என சொல்லி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளார்.

  பேக் யுவர் பேக்

  பேக் யுவர் பேக்

  பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏதாவது ஒரு நினைவுச் சின்னத்தை எடுத்துச் செல்லுங்கள் என ராஜுவிடம் பிக் பாஸ் சொல்ல டேர் டாஸ்க்கின் போது வைக்கப்பட்ட டெலிபோனை எடுத்துக் கொள்கிறேன் எனக் கூறி ராஜு அதனை எடுத்துக் கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாங்க பேக் யுவர் பேக் என வந்த போன் கால் தான் என் வாழ்க்கையையே மாற்றி உள்ளது எனக் கூற பேக் யுவர் போன் என பிக் பாஸ் பஞ்ச் கொடுத்து அசத்தினார்.

  இதயங்களை வென்ற ராஜு

  இதயங்களை வென்ற ராஜு

  #RajuWinningHearts என்ற ஹாஷ்டேக்கை போட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் ராஜு டைட்டில் வின் பண்ணதை கொண்டாடி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான ட்வீட்கள் ராஜு ஜெயமோகனுக்காக இந்த ஹாஷ்டேக்கில் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ராஜுவின் வெற்றியை மேடையில் கண்டு ரசிக்க அவரது மனைவி, அம்மா மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர்.

  கமல் கை தூக்கும் காட்சிக்காக

  கமல் கை தூக்கும் காட்சிக்காக

  என்னதான் இன்றே ராஜு ஜெயமோகன் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் என்பது கசிந்து விட்டாலும் கிராண்ட் ஃபினாலேவில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று பிரியங்காவையும் ராஜுவையும் கமல் மேடைக்கு அழைத்து வந்து ராஜுவின் கையை தூக்கி டைட்டில் வின்னர் என அறிவித்து கோப்பையை கொடுக்கும் அந்த காட்சியை காண ராஜுவின் ஆர்மியினர் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

  English summary
  Raju Jeyamohan’s emotional speech melting fans hearts. He says some days before his job is cutting av like this after he saw his special av at Bigg Boss house.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X