»   »  ராஜூமுருகன் - ஜீவா இணையும் ஜிப்ஸி!

ராஜூமுருகன் - ஜீவா இணையும் ஜிப்ஸி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குநர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையைக் கூறியுள்ளார். வித்தியாசமான கதை என்பதால் ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார்.

Raju Murugan - Jiiva's Gypsy

இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் எஸ் அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார்.

இயக்குநர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான சமூக வாழ்வியல் படத்தைக் கொடுக்கவுள்ளார். இந்தப் படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.

English summary
Director Raju Murugan is joining hands with Jiiva for Jipsy movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil