ராஜுவுக்கு தான் அதிக ரோஜாக்கள்.. மக்கள் மனதை கவர்ந்தவர் என பாராட்டிய ரஞ்சித்.. பிரியங்கா எங்கே?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் 102வது நாள் புரமோ 3 தற்போது வெளியாகி உள்ளது.
பிரியங்கா இல்லாத புரமோவே இந்த சீசனில் அதிகம் பார்க்காத நிலையில், தற்போது வெளியாகி உள்ள புரமோவில் பிரியங்கா இல்லாதது ரசிகர்களை ஏகப்பட்ட சந்தேகங்களுக்கு ஆளாக்கி உள்ளன.
ராஜுவுக்கு அதிக ரோஜாக்களை போட்டியாளர்கள் கொடுத்து வரும் நிலையில், பிரியங்கா எங்கே? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வருண் அக்ஷரா
பிக் பாஸ் வீட்டுக்கு நேற்று நாடியா சங், சுருதி, சிபி மற்றும் அபிநய் மீண்டும் வந்த நிலையில், இன்று தாமரை, அக்ஷரா மற்றும் வருண் உள்ளே வந்துள்ளனர். இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜா, மதுமிதா, ஐக்கி பெர்ரி, இசைவாணி, சின்னப்பொண்ணு எல்லாம் எப்போ வருவாங்க? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செந்தூரப்பூவே ரஞ்சித்
இரண்டாவது புரமோவிலேயே ஈரமான ரோஜாவே 2 மற்றும் செந்தூரப்பூவே சீரியல் பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் ஸ்பெஷல் கெஸ்ட்டாக உள்ளே நுழைந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில் நடிகர் ரஞ்சித் ரோஜாக்களை வைத்து ஒரு விளையாட்டு விளையாடி இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ராஜுவுக்கு அதிக ரோஜாக்கள்
மக்கள் மனதை கவர்ந்த போட்டியாளர் யார் என தேர்வு செய்து அவருக்கு ரோஜாக்களை தலையில் வைங்க என ரஞ்சித் சொல்ல சிபி, தாமரை, அக்ஷரா, அபிநய் என பல போட்டியாளர்களும் ராஜுவுக்கே அதிக ரோஜாப்பூக்களை கொடுத்துள்ள புரமோ வெளியாகி உள்ளது. நேற்று ரோஜா மாலை போட்ட நிலையில், இன்று ரோஜாப்பூக்களை வைத்து பிக்பாஸ் கேம் ஓடிக் கொண்டிருக்கிறது.

பிரியங்கா எங்கே
கடந்த இரண்டாவது புரமோ மற்றும் தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில் பிரியங்காவை ஆளே காணுமே என ரசிகர்கள் ஒவ்வொரு ஃபிரேமாக பாஸ் செய்து பார்த்து ஷாக் ஆகி உள்ளனர். பிரியங்காவுக்கு உடல் நலம் சரியில்லை என்றும் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார் என்றும் தகவல்கள் பரவ தொடங்கி உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக பிரியங்கா ஆர்மியினர் கலக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
Recommended Video

கடைசி நேர சதியா
உடல் நிலை சரியில்லை என நமீதா மாரிமுத்துவை அதிரடியாக வெளியேற்றியது போல கடைசி நேரத்தில் பாவனி அல்லது நிரூப்பை ஃபினாலே ஸ்டேஜில் மேடை ஏற்ற வேண்டும் என்பதற்காக பிரியங்காவுக்கு உடல் நிலை சரியில்லை என வெளியேற்றி விட்டனரா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. பிரியங்காவுக்கு ஒன்றும் ஆகியிருக்காது நிச்சயம் அவர் ஃபினாலேவில் இடம்பெறுவார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











