»   »  புத்தக பெயரையே டைட்டிலாக வைத்த தேசிய விருது இயக்குநர்... ஜீவாவின் அடுத்த படம் 'ஜிப்ஸி'!

புத்தக பெயரையே டைட்டிலாக வைத்த தேசிய விருது இயக்குநர்... ஜீவாவின் அடுத்த படம் 'ஜிப்ஸி'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'கலகலப்பு 2'. இப்படத்தைத் தொடர்ந்து அவர் நிறைய படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அவர் குரங்குடன் நடிக்கப்போகும் புதிய படத்திற்காக ரசிகர்களும் ஆவலாக வெயிட்டிங். இந்த நிலையில் ஜீவா, ராஜுமுருகன் இயக்கத்தில் அடுத்து ஒரு புதிய படம் நடிக்க இருக்கிறார்.

அப்படத்திற்கு 'ஜிப்ஸி' என்று பெயர் வைத்துள்ளனர். 'ஜிப்ஸி' ராஜுமுருகன் எழுதிய புத்தகத்தின் தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜுமுருகன்

ராஜுமுருகன்

'குக்கூ' படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராஜுமுருகன் அந்தப் படத்தில் கண் தெரியாதவர்களின் வாழ்வியலையும், அழகியலையும் அத்தனை அழகாகப் பதிவு செய்திருந்தார். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் கவனம் பெற்றார்.

ஜோக்கர்

ஜோக்கர்

அதற்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் சமூகப் பிரச்னைகளை மிகத் தீவிரமாகப் பேசியது. அரசையும், அதிகாரங்களையும் எதிர்த்து நின்று நையாண்டியாகக் கேள்வி கேட்டது. இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில், ராஜுமுருகனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வந்தனர். நேற்று ஜீவா நடிப்பில் ராஜுமுருகன் படம் இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஜிப்ஸி

ஜிப்ஸி

இரவு 12.01 மணிக்கு ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'ஜிப்ஸி' என அறிவிக்கப்பட்டது. ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் இப்படத்தைத் தயாரிக்கிறார். இத்தகவலை ஜீவா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

English summary
Jiiva is playing a new film directed by National award director RajuMurugan. This film has been titled 'Gypsy'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil