என் மனைவியின் அந்தஸ்து பற்றி அந்த நடிகர் கேள்வி கேட்பதா? பிரபல நடிகையின் கணவர் பாய்ச்சல்!
மும்பை: என் மனைவியின் அந்தஸ்து பற்றி அவர்கள் எப்படி கேள்வி கேட்கலாம் என்று பிரபல நடிகையின் கணவர் பாய்ந்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை ராக்கி சாவந்த். மும்பையை சேர்ந்த இவர், தமிழில் சில படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார்.
இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். மராத்தி, தெலுங்கு, போஜ்புரி படங்களிலும் நடித்துள்ளார்.

அடிக்கடி சர்ச்சை
தமிழில், ரவி- ராஜா இயக்கிய என் சகியே, ஶ்ரீநாத் இயக்கிய முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு ஆடிய இவர், எப்போதும் பரபரப்பாக இருப்பவர். ஏதாவது சர்ச்சையில் அடிக்கடி சிக்கிக் கொண்டிருப்பார். இவர், இந்தி சேனல் ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் மணமகனை தேர்வு செய்து திருமணம் செய்யப் போவதாக சில வருடங்களுக்கு முன் அறிவித்தார்.

ரகசிய திருமணம்
அதன்படி, யூடியூப் மூலம் பிரபலமான தீபக் கலால் என்பதை திருமணம் செய்வதாகச் சொன்னார். பிறகு தனது திருமணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்தார். பின்னர் கடந்த வருடம் இங்கிலாந்து தொழிலதிபர் ரிதேஷ் என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.

அழுதபடி வீடியோ
ஆனால், கணவர் பற்றியோ அவர் புகைப்படங்களையோ ராக்கி வெளியிடவில்லை. பின்னர் சில நாட்களுக்குப் பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன். என்னை மட்டும் கைவிட்டுவிட வேண்டாம் என்று கணவருக்குத் தெரிவித்தார்.

இந்தி பிக் பாஸ்
இந்நிலையில், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்போது கலந்து கொண்டிருக்கிறார். அங்கு அவர் திருமணம் பற்றி கேட்கப்பட்டது. 'என் கணவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பிசினஸ்மேன். எங்கள் திருமணம் கடினமான சூழ்நிலையில் நடந்தது. அதனால் அப்போது அறிவிக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

மிகப்பெரிய தவறு
மற்றொரு பேட்டியில், நான் திருமணம் செய்துகொண்டது மிகப் பெரிய தவறு. என் கடன்களை கட்ட முடியாமல் திவாலாகி இருக்கிறேன். குடும்பச் சுமை என் தோள்மீது இருக்கிறது. பணக்காரரைத் திருமணம் செய்துகொண்டால், என் கஷ்டங்களில் இருந்து வெளியே வந்துவிடலாம் என நினைத்தேன். ஆனால் அது தவறாக முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

நிக்கி தம்போலி
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகை நிக்கி தம்போலிக்கும் நடிகை ராக்கி சாவந்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கடந்த 15 வருஷமாக சினிமாவில் ராக்கி என்ன செய்தார் என்பது எல்லோருக்கும் தெரியும் என்றார், நடிகை நிக்கி.

ராக்கியின் அந்தஸ்து
நடிகர் மனு பஞ்சாபியும் ராக்கியின் அந்தஸ்து பற்றி குறைத்து மதிப்பிட்டுப் பேசினார். இந்நிலையில் ராக்கியின் வெளிநாட்டு தொழிலதிபர் கணவர் ரிதேஷ், நடிகை நிக்கியையும் மனு பஞ்சாபியையும் விளாசியுள்ளார். 'நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்துகொண்டுதான் இருக்கிறேன்.

பணத்தால் அல்ல
நான் 6 பில்லியன் உரிமையாளர். என் மனைவியின் அந்தஸ்து பற்றி அவர்கள் எப்படி கேள்வி கேட்கலாம். ஒருவருடைய அந்தஸ்து என்பது பணத்தால் தீர்மானிக்கப்படுவதல்ல, அது நடத்தையால் தீர்மானிக்கப்படுவது. அதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். நிக்கியிடம் என்ன அந்தஸ்து இருக்கிறது? அவர் மூன்று தென்னிந்திய படங்களில் மட்டும்தான் நடித்திருக்கிறார் என்றும் அவர் சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications











