அம்மாவுக்கு ப்ரெய்ன் ட்யூமர்.. கதறி அழுத பிக் பாஸ் பிரபலம்.. ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
மும்பை : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ராக்கி சாவந்த் தனது அம்மாவின் உடல் நிலை மோசமாக உள்ளதாக கூறி கதறி அழுதுள்ளார்.
நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சைக்கு பெயர் போனவர். இவர், ஆண் நண்பர்களுடன் பொது இடத்தில் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுப்பது, அரைகுறை ஆடையில் வலம் வருவது என அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கியே பிரபலமானார்.
இவர் தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார்.
கணவரை பிரிந்தார்

கணவரை பிரிந்தார்
சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 14, சீசன் 15 நிகழ்ச்சியிலும் ராக்கி சாவந்த் கலந்து கொண்டுள்ளார். ஆனால், ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை. இவர் கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு அற்புதமான கணவர் கிடைத்து இருப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்தேஷை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தார். பின் நிகழ்ச்சி முடிந்த சில மாதத்திலேயே, அவர் ஏமாற்றிவிட்டதாக கூறி கணவரை விட்டு பிரிந்தார்.

புது காதலன்
இதையடுத்து, ஆதில் கான் துரானி என்பவரை காதலிப்பதாகவும் என் கடந்த காலத்தைப் பற்றியும் அவரிடம் எதையும் மறைக்காமல் கூறிவிட்டேன். ஆதில் கான் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு அவரின் குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். இனி காதலன் ஆதிலுக்காக, முழுசா கவர் பண்ணும் ஆடைகளை மட்டுமே அணிவேன் என்று கூறியிருந்தார்.

மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில்
இதையடுத்து, மராத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த ராக்கி சாவந்த் டாப் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார். இருப்பினும், அந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதை தெரிந்து கொண்ட ராக்கி சாவந்த், 9 லட்சம் ரூபாய் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

கதறி அழுத பிரபலம்
ஜனவரி 8ந் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ராக்கி சாவந்த், கதறி அழுதபடி ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அதில், என் அம்மா ப்ரெய்ன் ட்யூமரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அம்மா குணமடைய அனைவரும் எனக்காக தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்று கதறி அழுதபடி பேசி உள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











